திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஏப்.18, கேரளாவில் ஏப்.23.. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

    குற்றாலம்: தமிழகத்திலும், கேரளாவிலும் லோக்சபா தேர்தலை சிறப்பாக நடத்துவது தொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது.

    தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் ஏப்ரல் 23ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும், கேரளாவிலும் தேர்தலை சிறப்பாக நடத்துவது தொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது.

    வைகோவை சந்தித்து ஆசிபெற்ற தயாநிதி... திமுக கூட்டணிக்கு வெற்றி என முழங்கிய புரட்சி புயல் வைகோவை சந்தித்து ஆசிபெற்ற தயாநிதி... திமுக கூட்டணிக்கு வெற்றி என முழங்கிய புரட்சி புயல்

    அரசு அதிகாரிகள் ஆலோசனை

    அரசு அதிகாரிகள் ஆலோசனை

    கூட்டத்தில் கொல்லம் ஆட்சியர் கார்த்திக்கேயன், கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைமன் ஜார்ஜ் , தென்காசி லோக்சபா தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் உட்பட காவல்துறை, வருவாய்த்துறை என இரு மாநில அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பட்டியல் சரிபார்ப்பு

    பட்டியல் சரிபார்ப்பு

    பின்னர் கொல்லம் ஆட்சியர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு மாநில எல்லையில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் சரிபார்ப்பது, முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் நடப்பதால் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    வாட்ஸ் அப் குரூப்

    வாட்ஸ் அப் குரூப்

    புதியதாக இரு மாநிலத்தின் எல்லைப்புற மாவட்ட காவல்துறையினர் வாட்ஸப் குரூப் துவக்கப்பட்டுள்ளது. தேர்தலை பாதுகாப்பானதாக நடத்த இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.

    வாகன சோதனை தீவிரம்

    வாகன சோதனை தீவிரம்

    தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் கூறியதாவது:கூட்டத்தில் இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் பட்டியல் விவரத்தை பரிமாறி கொள்ளப்பட்டது. தேர்தல் காலம் நெருங்குவதால் எல்லைப்பகுதியில் இரு மாநில அதிகாரிகளும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

     தகவல்

    தகவல்

    இரு மாநில எல்லையில் உள்ள கொல்லம், நெல்லை மாவட்டங்களில் உள்ள தகவல்களை பரிமாற முடிவு செய்யப்பட்டது. அதற்கு வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

    English summary
    kerala and tamilnadu election officials discussed about lok sabha election security arrangement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X