திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டி.. கொடுக்கும் முன் தட்டி பறிக்கும் பாஜக.. கோபத்தில் அதிமுக

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் வேட்பாளர் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே முருகன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    நெல்லை தொகுதியில் பாஜக போட்டியா..? சூசக தகவல் சொன்ன முருகன்!

    தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு 20 முதல் 25 தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் தங்கள் செல்வாக்கு அதிகம் உள்ளதால் அந்த தொகுதிகளை கேட்டு பெறும் முயற்சியில் பாஜக உள்ளது.

    இந்த நிலையில் அதிமுக தலைமை தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு நெல்லையில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்தார்.

    பேரணி

    பேரணி

    தச்சநல்லூரில் நேர்ரு 500 இரு சக்கர வாகனங்களில் பேரணியை தொடக்கி வைத்து முருகன் பேசுகையில் 234 தொகுதிகளிலும் பாஜக தனது தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம். தமிழகத்தில் இரட்டை இலக்கு எண்ணிக்கையில் சட்டசபைக்கு பாஜகவினர் செல்வர். இதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம்.

    அமைச்சரவை

    அமைச்சரவை

    கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமையுமா என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரியவரும். திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்தான் தொகுதியின் ஹீரோ. அவைச்சார இருந்த அவர் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அதை சுட்டிக் காட்டியே அவர் தேர்தல் பணிகளை மேற்கொள்வார். மேலும் கூட்டணி முடிவு செய்யும் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்றார்.

    நெல்லை அதிமுக

    நெல்லை அதிமுக

    இன்னும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை நடைபெறுவதற்கு முன்னரே நெல்லை தொகுதியை பாஜக தட்டி பறிப்பது போல் வேட்பாளரை அறிவித்துள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்சி தலைமை தட்டி கேட்ட வேண்டும், இல்லாவிட்டால் அதிமுக தலைமையாவது எச்சரிக்கை விடுக்க வேண்டும் என அதிமுகவினர் கருதுகிறார்கள்.

    எந்த தொகுதி

    எந்த தொகுதி

    இது ஒரு புறமிருக்க குஷ்புவின் ரசிகர்கள், குஷ்புவுக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கூறுங்கள் என சமூகவலைதளங்களில் எல் முருகனை கேட்டு வருகிறார்கள், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குஷ்பு அந்த தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. இந்த தொகுதியில்தான் குஷ்புவிற்கு ஓட்டு போட ரெடியா என பாஜகவின் சிடி ரவி பொதுமக்களிடையே கேள்வி எழுப்பியிருந்தார்.

    English summary
    TN BJP President L.Murugan announces that Nainar Nagendran is going to contest in Nellai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X