திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்ப நாங்குநேரி அதிமுகவுக்குதானா.. ரூபிக்கு கடும் எதிர்ப்பு.. உச்சகட்டத்தில் காங். கோஷ்டி பூசல்!

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் தேர்வாகி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Byelection : Nanguneri : அப்ப நாங்குநேரி அதிமுகவுக்குதானா.. ரூபிக்கு கடும் எதிர்ப்பு-வீடியோ

    சென்னை: ரூபி மனோகரன்.. இவர்தான் வேட்பாளர் என்று அறிவிக்கும் முன்னரே காங்கிரஸில் பஞ்சாயத்து ஆரம்பமாகி விட்டது. இதனால் நாங்குநேரியில் காங்கிரஸ் ஜெயிக்குமா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கிறது!

    எத்தனையோ பேர் போட்டியிட விரும்பியும், ரூபி மனோகரனுக்குதான் சீட் தரப்பட்டுள்ளது. குமரிஅனந்தன், ஊா்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் என்று 3 பேர் பட்டியலுடன் கே.எஸ். அழகிரி டெல்லிக்கு பறந்ததுமே இங்கு நிர்வாகிகள் அப்செட் ஆனார்கள்.

    காரணம், இவர்கள் 3 பேருமே தொகுதிக்கும் மாவட்டத்துக்கும் சம்மந்தமே இல்லாதவா்கள். குமரிஅனந்தனை முதுமையை காட்டி ஓரங்கட்டிவிட்டாலும், மீதம் உள்ளதில் நிறைய சான்ஸ் இருந்தவர்.

    தொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்தொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்

    20 கோடி ரூபாய்

    20 கோடி ரூபாய்

    ரூபி மனோகரன்தான். இவர் கன்னியாகுமரி கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்தவர். குடும்பம், பிசினஸ் எல்லாமே சென்னைதான். போன முறை எம்பி தேர்தலுக்கே கடுமையாக முயற்சித்தவர். பசை உள்ள பார்ட்டி. இப்போதைக்கு 20 கோடி ரூபாய்க்கு செலவு தொகுதிக்குள் இருக்கிறது. இதை சமாளிக்க இவரால் முடியும் என்பதால்தான் காங்கிரஸ் பெயரை முன் மொழிந்தது.

    உள்விவகாரம்

    உள்விவகாரம்

    அதுமட்டுமில்லை, அதிமுக வேட்பாளா் நாராயணனை எதிர்கொள்ள இவர்தான் சரியான நபர் என்ற கணக்கையும் காங்கிரஸ் போட்டது. அதனால்தான் ரூபிக்கு கை கொடுத்தது தலைமை! இதில் 3 விதமான பிரச்சனைகள் எழுந்துள்ளது.

    கண்துடைப்பா?

    கண்துடைப்பா?

    முதலாவதாக, உள்ளூர் பிரமுகர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். "நாங்க இதே மாவட்டத்துல பொறந்து, வளர்ந்து, கட்சிக்காக, 20, 30 வருஷம் உழைச்சிட்டு வர்றோம். எங்களுக்கு சீட் தருவீங்கன்னு பார்த்தால், வெளியூர்ல பிசினஸ் பண்ணிட்டு இருக்கறவங்களுக்கு சீட் கொடுக்கிறது ஏன்? அப்படின்னா, உங்களுக்கெல்லாம் அந்த 20 கோடிதான் கண்ணுக்கு தெரியுதா? நாங்கள் கட்சிக்காக இவ்வளவு உழைத்தது எல்லாம் வீணா? நடத்திய நிர்வாகிகள் கூட்டமும் கண்துடைப்பா" என்று புலம்பல் எழுந்துள்ளது.

    கிறிஸ்தவ நாடார்

    கிறிஸ்தவ நாடார்

    இரண்டாவது பிரச்சனை வாக்கு வங்கி சம்பந்தப்பட்டது. நாங்குநேரியில் இந்து நாடார் சமூகத்தினர்தான் அதிகம். கிறிஸ்தவ நாடார்கள் குறைவு. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனோ கிறிஸ்தவ நாடார். என்னதான் கரன்சிகளை அள்ளி விட்டாலும், எல்லாருமே பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட முன்வருவார்களா என்பதும் சந்தேகம்தான். அதனால் இதுவும் ஒரு பின்னடைவாக உள்ளது. இது தொகுதி தி்முகவினர் மட்டுமல்லாமல் காங்கிரஸார் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

    கலக்கத்தில் திமுக

    கலக்கத்தில் திமுக

    இந்த இரண்டு காரணங்களுக்காக இடைத் தேர்தலில் அவர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக பணியாற்றுவார்களா என்பது சந்தேகம்தான். அப்படியே வேலை பார்த்தாலும் அது கண்டிப்பாக மேம்போக்காகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் உள்ளடி வேலை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம். இது காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமல்ல, திமுகவுக்கே கலக்கத்தை தந்துள்ளதாம்.

    அதிமுக வெற்றி?

    அதிமுக வெற்றி?

    ஒருவேளை இதெல்லாம் காரணமாக அமைந்துவிட்டதால், காங்கிரஸுக்கு பின்னடைவாக அமையும் என்பதே உண்மை. ஆக மொத்தம்.. காங்கிரஸின் இப்படி ஒரு உள்குத்து விவகாரத்தை அதிமுக செமயாக பயன்படுத்தி கொள்ளும் என்றும், எல்லாரும் சேர்ந்து நாங்குநேரியில் அதிமுகவை வெற்றி பெற வைத்துவிடுவார்கள் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.

    English summary
    The problem has arisen within the TN Congress as Ruby manoharan is declared a Nanguneri candidate. It is not known whether the Congress will make a serious effort to win.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X