திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்டி உருள போகுது லோக்கல் காங்கிரஸ்.. நாங்குநேரியில் தாறுமாறாக வெடித்த கோஷ்டி பூசல்!

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    விக்கிரவாண்டியில் ஆரம்பிச்சிருச்சாம் பண மழை | Vikkiravandi ByElection

    நெல்லை: கிழிய போகிறது சட்டை.. கட்டி உருள போகிறார்கள் லோக்கல் காங்கிரஸார்.. இப்போது நாங்குநேரி தொகுதியை வைத்து உள்ளூர்காரர்கள் விவகாரத்தில் இறங்கி விட்டனர். இதனால் படு ஹாட்டாக உள்ளது இந்த தொகுதி!

    முதலில் திமுகதான் நாங்குநேரியில் போட்டியிட ஆர்வம் காட்டியது. ஆனாலும் நெல்லை மாவட்ட காங்கிரஸார் களத்தை எப்படியாவது வாங்க வேண்டும் என்று மும்முரமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் தனியாக போட்டியிடலாமா என்ற பேச்சுகூட எழுந்தது.

    இதன்பிறகுதான் இந்த தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக. இதனால்நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துவிட்டனர். ஆனால், சீட் யாருக்கு தரப்படும் என்பதில் அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாகி உள்ளது.

    துரைமுருகனை பற்றி என்ன பேசினார் குடியாத்தம் குமரன்... நீக்கத்திற்கான பின்னணிதுரைமுருகனை பற்றி என்ன பேசினார் குடியாத்தம் குமரன்... நீக்கத்திற்கான பின்னணி

    வசந்தகுமார்

    வசந்தகுமார்

    முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனின் உறவினரும், நெல்லை மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை செயலருமான எஸ்டிடி. ராஜேஷ், வசந்தகுமாரின் மைத்துனர் எம்.எஸ்.காமராஜ், ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலருமான வானுமாமலை.. என ஏகப்பட்ட பேர் இங்கு போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் வேட்பாளரை அறிவிப்பதில் குழப்பமே நீடித்து வருகிறது.

    ஊர்வசி அமிர்தராஜ்

    ஊர்வசி அமிர்தராஜ்

    எத்தனை பேர் போட்டியிட்டாலும், வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் அல்லது ரூபி மனோகரன் இவர்களில் ஒருவர்தான் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்தான் ஊர்வசி அமிர்தராஜ். இவரது அப்பா செல்வராஜ் ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ.

    ரூபி மனோகரன்

    ரூபி மனோகரன்

    அதேபோல, ரூபி மனோகரன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போதைக்கு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர்கள் இருவரையுமே காங்கிரஸ் முன்னிறுத்த காரணம், தேர்தல் செலவை இவர்களே பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையினால்தான் என்று சொல்லப்படுகிறது.

    ஈகோ பிரச்சனை

    ஈகோ பிரச்சனை

    ஆனால் உள்ளூர் தொகுதியிலோ நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. ஈகோ பிரச்சனை வெடித்துள்ளது. முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ''நாங்குநேரியில் தொகுதிக்காரர்களுக்கு உள்ளூர்காரர்களுக்கு சீட் தர வேண்டும் என்று கேட்டு வருகிறோம். வெளி மாவட்டத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால், 8 பேர் சுயேச்சையாக போட்டியிடுவோம்" என்று தெரிவித்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குடுமிப்பிடி

    குடுமிப்பிடி

    அடிச்சி புடிச்சி திமுகவிடம் இருந்து தொகுதியை வாங்க முடிந்தது.. ஆனால் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் காங்கிரசுக்குள் குடுமிப்பிடி நீடித்து வருகிறது. ஏற்கனவே பல கோஷ்டிகளாக மல்லு கட்டி வருவதில் முன்னணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இதிலேயும் கட்டி புரண்டு உருள்வது கூட்டணி கட்சியினருக்கு கிலியைதான் தரும் என தெரிகிறது.

    English summary
    Sources say that Local Politics is raising in Nanguneri Congress about the Candidate
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X