திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா யாருக்கும் அடிபணிந்தது இல்லை.. தமிழக நலன்களை விட்டுக்கொடுத்தது இல்லை.. ஆனால்.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி, விக்கிரவாண்டி.. கலக்கம் தரும் கள நிலவரம் | Nanguneri By Election

    நெல்லை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாருக்கும் அடிபணிந்தது இல்லை. ஆனால் இப்போது உள்ள அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

    நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து நாங்குநேரி தொகுதிக்கு உள்பட்ட சாவளைக்காரன் குளம் என்ற பகுதியில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    அப்போது ஸ்டாலின் பேசுகையில், "ரூபி மனோகருக்கு ஆதரவாக வாக்களித்து இந்த தேர்தலில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அளித்தீர்கள். உங்களுக்கு எல்லாம் மிக்க நன்றி.

    ஜெயலலிதாவுக்கு சொந்த ஊர் ஆண்டிபட்டியா? அதிமுகவுக்கு கே.எஸ்.அழகிரி கேள்விஜெயலலிதாவுக்கு சொந்த ஊர் ஆண்டிபட்டியா? அதிமுகவுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

    நான் எப்படி இருக்கேன்

    நான் எப்படி இருக்கேன்

    நம்ம வீட்டு கல்யாணத்திற்கு வருவது போல் இங்கு வந்திருக்கீங்க. இந்த புள்ளையை டிவியில் பார்த்து இருப்போம். பேப்பர்ல பார்த்திருப்போம். இப்ப ஊருக்கே வருது.. கிராமத்துக்கு வருது. நேர்ல எப்படி இருக்கார்னு பார்க்க வந்துருக்கீங்க.. நான் எப்படி இருக்கேன். என்னை குடும்பமாக பார்க்க வந்திருக்கிறீர்கள். இது தான் பாசம்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சியல்ல. எம்ஜிஆர் இருந்த போது அதிமுக ஆட்சி இருந்தது. அதை ஜெயலலிதா வழிநடத்தினார். என்னதான் ஊழல்கள் நடந்திருந்தாலும் ஒருமுறை கூட தமிழக நலன்களை இவர்கள் விட்டுக்கொடுத்தது இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா யாருக்கும் அடிபணிந்து போனது இல்லை. ஆனால் இப்போது உள்ள எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது.

    மத்திய அரசு திணிப்பு

    தமிழை செம்மொழியாக அறிவிக்க வைத்தவர் கலைஞர். ஆனால் இப்போது ஹிந்தி திணிக்கப்படுகிறது சமஸ்கிருதம் பேச வேண்டும் என்கிறார்கள். இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தமிழையே பேசக்கூடாது என்று சொல்லக்கூடாது. இந்தியை தபால் நிலையங்களில், மத்திய அரசு அலுவலங்களில் மத்திய அரசு திணிக்கிறது.

    கருணாநிதியின் திட்டங்கள்

    கருணாநிதியின் திட்டங்கள்

    எடப்பாடி ஒரு விபத்தில் முதல்வர் ஆனார். அவர் மத்திய அரசு சொல்வதை கேட்டு அப்படியே அணிபணிந்து நடப்பவர். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது சொத்தில் பெண்ணுக்கு சமஉரிமை, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை, விதவை பெண்களுக்கு உதவித்தொகை இவையெல்லாம் மகளிர் நலன்கருதி கொண்டு வந்த திட்டங்கள்" இவ்வாறு கூறினார்.

    English summary
    dmk leader mk stalin election speech in nanguneri. he attacks edappadi palaniswamy but appreciate jayalaitha
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X