திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசின் அடிமை எடப்பாடி பழனிசாமி... மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Google Oneindia Tamil News

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட முன்னீர்பள்ளம், தருவை, செங்குளம் ஆகிய பகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு இன்று இரண்டாவது நாளாக ஆதரவு திரட்டினார். அப்போது, அவர் பேசியதாவது:

நீங்கள் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், நமக்குத்தான் - நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத்தான் உங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கிறீர்கள்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் தி.மு.க தலைமையிலான அணிக்குதான் ஆதரவு தந்திருக்கிறீர்கள். அடுத்ததாக, நடைபெறப்போகிற இடைத்தேர்தலிலும் நீங்கள் இந்த அணிக்கு தான் வெற்றியைத் தேடித்தரப்போகிறீர்கள் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது.

ஜோசியர் ஓகே சொல்லிட்டாராம்.. ரஜினி கண்டிப்பா வர்றாராம்.. எப்பன்னுதான் தெரியல.. டிஸ்கஷன் ஓடுதாம்!ஜோசியர் ஓகே சொல்லிட்டாராம்.. ரஜினி கண்டிப்பா வர்றாராம்.. எப்பன்னுதான் தெரியல.. டிஸ்கஷன் ஓடுதாம்!

கமிஷன்

கமிஷன்

ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இன்றைக்கு எங்கு பார்த்தாலும், குடத்தைத் தூக்கிக்கொண்டு, சாலைகளில் சாலைமறியலில் ஈடுபடும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் இந்த குடிநீர்ப் பிரச்சினைதான். அதற்குக் காரணம்; கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி என்ன செய்தது, குளங்களைத் தூர்வாரியதா? அல்லது முறையாகத் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததா? குளங்களைச் சுத்தப்படுத்த முயன்றாலும், அதில் டெண்டர் விட்டு, கமிசன் எப்படி அடிக்கலாம் என்பதில்தான் குறியாய் இருக்கிறார்கள்.

அடிப்படை பிரச்சனை

அடிப்படை பிரச்சனை

திமுக ஆட்சியில் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். அதேபோன்று, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தோம். சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். பெண்களின் முன்னேற்றத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலத்தில் ஏராளமான நன்மைகளை நாம் செய்து கொடுத்தோம். ஆனால், இன்றைக்கு உங்களால் வங்கிகளுக்குச் சென்று வட்டியில்லாக் கடனை வாங்க முடிகிறதா? சுழல்நிதி உங்களுக்கு வந்து சேருகிறதா என்றால், கிடையாது!

விளக்கம்

விளக்கம்

தற்போதைய ஆட்சியாளர்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால், அவர்கள் கட்சி தோற்றுவிடும் என்று காரணத்தினால், அதனை நடத்த முன்வரவில்லை. ஆனால் அந்த தோல்வி பயத்தை மறைக்க, தேர்தல் நடத்தவிடாமல் தி.மு.க தான் வழக்குத் தொடுத்தது என்று அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லுகிறார்கள். தி.மு.க வழக்குத் தொடுத்தது என்றால், முறையாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தோம்.

அடிமை ஆட்சி

அடிமை ஆட்சி

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். மத்தியில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சிக்கு அடிமையாக இங்கே இருக்கக்கூடிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

English summary
mk stalin says edappadi palanisami is the slave of the central government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X