திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சார்.. 300 ரூபாய் கை மாத்தா கொடுங்களேன்.. தேர்தல் அதிகாரியிடமே கடன் கேட்ட ம.நீ.ம. வேட்பாளர்

டெபாசிட் செய்ய 300 ரூபாய் இல்லாமல் தென்காசி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் அதிகாரியிடமே 300 ரூபாய் கடன் கேட்ட கமல் கட்சியின் வேட்பாளர்- வீடியோ

    தென்காசி: "சார்.. டெபாசிட்டுக்கு பணம் பத்தல.. 300 ரூபா கடனா தர முடியுமா" என்று தேர்தல் அதிகாரியிடமே மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கெஞ்சிய சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கமல் கட்சியில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்ததில் இருந்தே ஒரே பரபரப்புதான். 30 வருஷமாக இல்லாமல், திடீரென நாசரின் தம்பி ஒரு பிரச்சனையை கொண்டு வருகிறார். மற்றொரு பக்கம் கோவை சரளாவை காரணம் காட்டி ஒருவர் வெளியேறுகிறார்.. திரும்பவும் உள்ளே வருகிறார்..

    லேட் ஆக வந்த காரணத்தினால் இன்னொருவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாமல் போய்விட்டது.. இப்படி தேர்தல் முடிவதற்குள் தினம் ஒரு சமாச்சாரம் மய்யத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறது.

    தோட்டத்திற்கு கூப்பிட்டார்.. போனேன்.. சாப்பாடு போட்டு இங்க வந்துடுன்னார்.. நான் போகலை.. திருமாவளவன்தோட்டத்திற்கு கூப்பிட்டார்.. போனேன்.. சாப்பாடு போட்டு இங்க வந்துடுன்னார்.. நான் போகலை.. திருமாவளவன்

     வேட்பு மனு தாக்கல்

    வேட்பு மனு தாக்கல்

    இப்பவும் அப்படித்தான் ஒரு சம்பவம் தென்காசி தொகுதியில் நடந்துள்ளது. தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நெல்லை கலெக்டர் ஆபீசில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவும் நேற்று முன்தினம்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்!

     மாற்று வேட்பாளர்

    மாற்று வேட்பாளர்

    அன்றைய தினம் மய்யம் சார்பில் சிவகாசியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். இவருடன் கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்வரன் என்பவரும் வந்தார். இவர்தான் அக்கட்சியின் மாற்று வேட்பாளர்.

     டெபாசிட் தொகை

    டெபாசிட் தொகை

    இருவரும் முத்து ராமலிங்கத்திடம் மனு தாக்கல் செய்ய சென்றார்கள். அப்போது அவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. மனுவை பூர்த்தி செய்து தரும்போது, டெபாசிட் தொகை 12,500 ரூபாய் தர வேண்டும் என்று தேர்தல் அலுவலர் சொன்னார்கள்.

     300 ரூபாய்

    300 ரூபாய்

    உடனே வெங்கடேஷ்வரன், "சார்.. என்கிட்ட பணம் பத்தலை.. 300 ரூபாய் குறையுது.. நீங்க அதை கடனா தந்தீங்கன்னா நல்லா இருக்கும். மனுவை தாக்கல் பண்ணிட்டு, உடனே கீழே போய் பணத்தை வாங்கி வந்து திருப்பி தந்திடறேன்" என்று கெஞ்சினார்.

     பணத்தை புரட்டினார்

    பணத்தை புரட்டினார்

    இதை கேட்டதும் தேர்தல் அலுவலர் உட்பட அனைவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது. உடனே தேர்தல் அலுவலர் "நீங்கதானே வேட்பாளர்.. டெபாசிட் பணத்தை நீங்கதான் தரணும். நான் எல்லாம் தரக்கூடாதே" என்றார். அதன்பின்னர் ஓடோடி சென்ற வெங்கடேஷ்வரன், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 300 ரூபாய் பணத்தை அலைந்து திரிந்து புரட்டி கொண்டு தந்து ஒருவழியாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்!

    English summary
    Thenkasi MNM Candidate had no money to deposit. So he has asked for loan of 300 rupees from the Election Officer
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X