திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துப்பு துலங்கப்படாத உமா மகேஸ்வரி மரணம்.. வழக்கு விசாரணை நடக்கிறதா? இல்லையா?.. கனிமொழி சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    துப்பு துலங்கப்படாத உமா மகேஸ்வரி மரணம்: கனிமொழி கேள்வி

    நெல்லை: நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி , அவரது கணவர் முருகசங்கரன் ஆகியோர் படத்திற்கு திமுக மாநில மகளிரணி செயலாளரும் , தூத்துக்குடி லோக்சபா எம்பியுமான கனிமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    நெல்லை கடந்த 23-ஆம் தேதி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி , அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டின் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது இல்லத்திற்கு திமுக மாநில மகளிரணி செயலாளரும் , தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது உமா மகேஸ்வரியின் மகள்கள் மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். தொடர்ந்து கொலையான பணிப்பெண் மாரியம்மாளின் இல்லத்திற்கும் சென்று அவரது மூன்று குழந்தைகளையும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

    ஆர்வம்

    ஆர்வம்

    தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேயர் உமாமகேஸ்வரி அனைவரிடமும் இனிமையாக பழக கூடியவர் . கட்சி பணிகளில் தன்னை ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்படும் சகோதரி.

    நிகழ்வு

    நிகழ்வு

    அவர் இப்படி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுவரை இந்த வழக்கில் யாரையும் கண்டுபிடிக்கவில்லை , கைது செய்யப்படவில்லை என்ற நிலையை பார்க்கும் போது அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தையும் , கோபத்தையும் உருவாக்கக் கூடிய நிலையை இந்த நிகழ்வு உருவாக்கியுள்ளது.

    புலம் என்ன

    புலம் என்ன

    என்ன காரணம் என்று தெரியாமல் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் , அந்த வீட்டில் பணியாற்றிய சகோதரியின் 3 குழந்தைகளும் ஆதரவற்றவர்களாக்கப்பட்டுள்ளார்கள் . இந்த கொலைகளுக்கான பின்புலம் என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

    தண்டனை

    தண்டனை

    விரைவில் இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன். இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது மிக மோசமான சட்டம் ஒழுங்கை காட்டுகிறது, உண்மையாகவே விசாரணை நடக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

    English summary
    Tuticorin MP Kanimozhi today visited EX Mayor Uma Maheswari's house andf paid tribute to her and her husband's demise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X