திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‘நண்பருக்கு’ நன்மை செய்யும் பிரதமர்! எல்லாமே அதானிக்கு? பெரிய ஆபத்தில் தான் முடியும்! சீறிய சீமான்.!

Google Oneindia Tamil News

நெல்லை : மின்சாரத்துறை உட்பட அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்துவது என்பது ஒரு பேராபத்தை நோக்கிய பயணம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"இலங்கையில் மோசமான பொருளாதர கொள்கையால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ அரிசி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிலைமை நமக்கு வருவதற்கு முன்னே எச்சரித்து கொள்ள வேண்டும் அதுதான் உணர்த்துகிறது.

'8 நம்பர் ஃபார்ச்சுனர்’சனி பகவான் ஆதிக்கம்! வெற்றி பாதையில் சீமான்! அடித்து சொல்லும் ’ஜெ’வின் நிழல்!'8 நம்பர் ஃபார்ச்சுனர்’சனி பகவான் ஆதிக்கம்! வெற்றி பாதையில் சீமான்! அடித்து சொல்லும் ’ஜெ’வின் நிழல்!

நாம் தமிழர் சீமான்

நாம் தமிழர் சீமான்

மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. ஆனால் மின் உற்பத்தியை ஏன் தனியார் வசம் கொடுக்கிறீர்கள்? அப்படி கொடுத்தால் எப்படி மின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பீர்கள்? மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.

மத்திய அரசு

மத்திய அரசு

விவசாயிகள், மீனவர்கள், நீட் மாணவர்கள் மாணவிகள் செத்தார்கள் அதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவித்ததா? வீட்டில் தேசிய கொடி ஏற்றுவதற்கு வீடு வேண்டும் நீங்கள் தான் சொன்னீர்கள் 75வது சுதந்திர தினம் கொண்டாடும் போது எல்லாருக்கும் வீடு இருக்கும் என்று நீங்கதான் சொன்னீங்க தற்போது அனைவருக்கும் வீடு இருக்கா?

தனியாருக்கு லாபம்

தனியாருக்கு லாபம்

மத்திய அரசு ஏன் அழுத்தம் கெடுக்கிறது? ஏனென்றால் தயாரிப்பது அவரது நண்பர் அதானி தயாரிக்கிறார். அவருக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக மக்களை வதைக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி கூட அரசிடம் இல்லை.

பேராபத்தை நோக்கிய பயணம்

பேராபத்தை நோக்கிய பயணம்

எல்லாம் தனியர் மயம் என்பது பேராபத்தை நோக்கிய பயணம். அது மோசமான பொருளாதார கொள்கை. இது போன்ற மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் தான் அண்டை நாடான இலங்கை இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது. அது நமக்கும் ஏற்படும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்" என கடுமையாக விமர்சித்தார்.

English summary
Naam Tamilar katchi co ordinator Seeman has strongly criticized the privatization of all sectors, including the power sector, as a journey towards disaster.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X