திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளியூர் நபருக்கு சீட் கொடுத்தது ஏன்? நாங்குநேரி தேர்தலால் காங்கிரஸில் குழப்பம்.. என்ன நடக்கிறது?

நாங்குநேரி தொகுதியின் சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளராக ரூபி மனோகர் நியமிக்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்தி உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: நாங்குநேரி தொகுதியின் சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளராக ரூபி மனோகர் நியமிக்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்தி உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

திமுக கூட்டணி சார்பாக நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகர் போட்டியிடுகிறார். இவருக்காக அடுத்த வாரம் முழுக்க திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

நாங்குநேரி எம்எல்ஏவாக காங்கிரஸ் உறுப்பினர் வசந்த குமார் இருந்தார். ஆனால் இவர் கன்னியாகுமரி எம்பி தேர்தலில் நின்று வென்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தற்போது அங்கு இடைத்தேர்தல் வந்துள்ளது .

நாங்குநேரி முக்கியம்.. காங்கிரஸ் வேட்பாளருக்காக களமிறங்கிய ஸ்டாலின்.. அதிரடி பிளான் ரெடி!நாங்குநேரி முக்கியம்.. காங்கிரஸ் வேட்பாளருக்காக களமிறங்கிய ஸ்டாலின்.. அதிரடி பிளான் ரெடி!

என்ன அறிவிப்பு

என்ன அறிவிப்பு

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக வசந்த குமாரின் நண்பர் ரூபி மனோகர் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பு தற்போது கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு நாங்குநேரி தொகுதியில் பெரிதாக செல்வாக்கு இல்லை. அங்கு மக்களுக்கு அவரை தெரியாது, என்று உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.

ஊர்

ஊர்

ரூபி மனோகரன் கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்தவர்தான். அங்கு இருக்கும் சிறிய கிராமமான முன்சிறையை சோ்ந்தவா். ஆனால் கல்லூரிக்கு பின் இவர் செட்டில் ஆனது சென்னையில். அங்குதான் இவர் வேலை பார்க்கிறார்.

வருவது இல்லை

வருவது இல்லை

இவர் பிசினஸ் செய்வது சென்னையில்தான். அதேபோல் காங்கிரஸ் தொடர்பான பணிகளையும் இவர் கன்னியாகுமரியில் செய்தது கிடையாது. அரசியல் ரீதியாக இவர் கன்னியாகுமரிக்கோ, நாங்குநேரிக்கோ பெரிதாக பயணம் செய்தது கிடையாது.

அரசியல் எப்படி

அரசியல் எப்படி

அதேபோல் கட்சி சார்பாக, இவர் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இதனால்தான் தற்போது தென் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கொதிப்பில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. தென் மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால என்ன

ஆனால என்ன

நிறைய மூத்த நிர்வாகிகள் கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்சிக்காக உள்ளூரில் உழைத்தவர்களுக்கு வாய்ப்புள்ளது. ஆனால் சென்னையில் இருக்கும் நபருக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தார்கள். இது காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதிக்க வாய்ப்புள்ளது, என்று காங்கிரஸ் நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.

English summary
Nanguneri By-Election creates huge blow-up inside The Congress Party in South Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X