திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணனுக்கு இல்லாட்டி பரவாயில்லை.. இவரை நிறுத்துங்க.. வசந்தகுமார் தந்த பிராமிஸ்.. ரூபிக்கு அடித்த லக்

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் தேர்வாகி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக நா புகழேந்தி.. ஸ்டாலின் அறிவிப்பு-வீடியோ

    சென்னை: ரியல் எஸ்டேட் பிசினஸ் மேன் ரூபி மனோகரனை நாங்குநேரி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது. குமரி அனந்தன் போன்ற சீனியர்கள் இருக்கும்போது, இவரை தமிழக காங்கிரஸ் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

    காங்கிரசுக்கு நாங்குநேரியை திமுக ஒதுக்கியதுமே தொண்டர்கள் குஷியாகிவிட்டனர். ஆனால், சீட் யாருக்கு தரப்படும் என்பதில் அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாகி உள்ளது.

    முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனின் உறவினரும், நெல்லை மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை செயலருமான எஸ்டிடி. ராஜேஷ், வசந்தகுமாரின் மைத்துனர் எம்.எஸ்.காமராஜ், கட்சியின் மாநிலப் பொது செயலாளர் வானுமாமலை.. என ஏகப்பட்ட பேர் போட்டியிட விரும்பினர்.

     மாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு மாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு

    சுயேச்சைகள்

    சுயேச்சைகள்

    ஆனால், முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ''நாங்குநேரியில் தொகுதிக்காரர்களுக்கு உள்ளூர்காரர்களுக்கு சீட் தர வேண்டும் என்று கேட்டு வருகிறோம். வெளி மாவட்டத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால், 8 பேர் சுயேச்சையாக போட்டியிடுவோம்" என்றதுமே கூடுதர் பிரஷர் எகிறியது.

    ஊர்வசி அமிர்தராஜ்

    ஊர்வசி அமிர்தராஜ்

    ஆனால் 3 பேர் இந்த லிஸ்ட்டில் தேர்வானார்கள். அதில், ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர்தான் இறுதி செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர்தான் எப்படியும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, திமுகவிடம் சீட் கேட்கும்போது, குமரிஅனந்தனை முன்னிறுத்திதான் தொகுதியை கேட்டதாக சொல்லப்பட்டது.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    ஆனால், அவருக்கு 80 வயது ஆகிவிட்டதாலும், உடல்நிலை காரணத்தை காட்டியும் சீட் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்படியானால் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் இவர்களில் ஒருவருக்குதான் வாய்ப்பு என்று ஆனது. இவர்கள் இருவரையுமே காங்கிரஸ் முன்னிறுத்த காரணம், தேர்தல் செலவை இவர்களே பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையினால்தான்.

    ரியல் எஸ்டேட்

    ரியல் எஸ்டேட்

    இதில், ரூபி மனோகரன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ்மேன். சொந்த ஊர் கன்னியாகுமரி என்றாலும், பல வருஷமாக சென்னையில்தான் ரூபி குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவருகிறார். தென்சென்னையில் இவரது கம்பெனி பெயர் மிகவும் பிரபலம். ரூபி பில்டர்ஸ் என்ற பெயரில் நிறைய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி உள்ளது.

    பொறுப்பாளர்

    பொறுப்பாளர்

    கட்சியை பொறுத்தவரை, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்தவர். பசையுள்ள பார்ட்டியும்கூட. அது மட்டுமில்லை.. ரூபி மனோகரன், வசந்தகுமாரின் நெருங்கிய உறவினரும் ஆவார். இந்த தொகுதி இவருக்கு ஒதுக்கப்பட இது ஒரு காரணம். மேலும் தொகுதியை பொறுத்தவரை இதுவரை வசந்தகுமார் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அதனால் இதனை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து, ரூபியை வெற்றி பெற வைப்பதாக வசந்தகுமார், கட்சி மேலிடத்துக்கு வாக்கு தந்திருக்கிறாராம். சீட் வழங்க இதுவும் ஒரு முக்கிய காரணம்.

    தேனி பார்முலா

    தேனி பார்முலா

    இதைதவிர, எப்படியும் இந்த இடைத்தேர்தலுக்கு கரன்சிகளை இறக்கினால்தான் வேலைக்காகும் என்பது நிலைமையாகிவிட்டது. அதிமுகவின் தேனி பார்முலாவுக்கு இணையாக ஒருவர் தேவை என்பதால்தான் ரூபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்!

    English summary
    Ruby Manoharan has announced as Nanguneri Constitution Congress Candidate
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X