திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விபத்தில் சிக்கி முடங்கிய பறவை மனிதன் பால்பாண்டி.. குஞ்சுகளுக்கு மீன் வாங்க முடியாத கவலையில் தவிப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பறவை மனிதன் என அழைக்கப்படும் பால்பாண்டிக்கு துணை கமிஷனர் அர்ஜுனன் சரவணன் உதவ முன்வந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ளது கூந்தங்குளம். இந்த இடத்தில் ஒரு பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரும்.

இந்த சரணாலயத்திற்கு சுமார் ஒரு லட்சம் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இந்த சரணாயலத்தை சுற்றி உள்ள மக்கள் பறவைகளை பாதுகாத்து வருகிறார்கள். இவர்களை காட்டிலும் பறவைகளை பால்பாண்டி என்ற பறவை மனிதனும் பாதுகாத்து வருகிறார்.

இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா.. 1.70 லட்சம் பேர் பாதிப்பு.. ஷாக்!இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா.. 1.70 லட்சம் பேர் பாதிப்பு.. ஷாக்!

குளங்கள்

குளங்கள்

40 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் பல மைல்கள் குளங்களிலும், கண்மாய்களிலும் அலைந்துத் திரிந்து பறவைகள் கட்டியிருக்கும் கூடுகள் பத்திரமாக உள்ளனவா என பார்ப்பதுதான் கணவன், மனைவியின் முழுநேர வேலையாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? பல சமயங்களில் கூடுகளில் இருந்து குஞ்சுகள் எகிறி கீழே விழுந்து விடும். அவைகளால் பறந்து மீண்டும் கூட்டில் ஏற முடியாது.

சிறுவிலங்குகள்

சிறுவிலங்குகள்

இதற்காகவே காத்திருக்கும் நரி போன்ற சிறுவிலங்குகள் அவைகளை தின்றுவிடும் முன்பு, மீட்டெடுத்து மீண்டும் கூட்டில் சேர்ப்பார் இந்தப் பறவை மனிதன். பரந்து விரிந்த நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எந்தெந்தப் பறவைகள் கூடு கட்டியுள்ளன என்பது இவருக்கு அத்துப்படி. இன்னும் சொல்லப்போனால், இவரிடம் சொல்லிவிட்டுதான் கூடே கட்டுமோ என நாம் வியக்கும் வண்ணம் இவருக்கும், அந்தப் பறவைகளுக்கும் அத்தனை அந்நியோன்யம் உண்டு. மனிதர்களில் மாமனிதராக வாழும் இவர் ஓர் அபூர்வப் பிறவி.

வழிகாட்டி

வழிகாட்டி

இப்படி இயற்கையின் மீது அதீத அன்பு கொண்ட பால்பாண்டி அண்மையில் விபத்தில் சிக்கினார். இதனால் இவரால் வெளியே செல்ல முடியவில்லை. அதாவது சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்து அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மட்டுமே ஆகும். இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். காசு இல்லாமல் மீனை எப்படி வாங்குவது என்ற கவலையில் இருந்தார்.

நெல்லை

நெல்லை

இந்த நிலையில் இவரது நிலை குறித்து ட்விட்டரில் எழுத்தாளர் எஸ்.கே.பி. கருணா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் பால் பாண்டியின் நிலை குறித்து விளக்கி கூறி அவருக்கு உதவிடுமாறு நண்பர்களிடம் கேட்டுக் கொண்டார். இது நெல்லை நகர துணை கமிஷனர் அர்ஜுன் சரவணனின் கவனத்திற்கு சென்றது.

பிளமிங்கோ

பிளமிங்கோ

இதுகுறித்து அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பால் பாண்டி நெல்லையின் பறவை மனிதன். அவருடன் சேர்ந்து Bird watching சென்றுள்ளேன். நெல்லைக்கு பிளமிங்கோ வந்துள்ளதை அறிந்தபோது மணிக்கணக்கில் தேடி காண்பித்தவர். நண்பர்கள் உதவியுடன் ஒரு கணிசமான தொகையை அவருக்கு அளிக்கிறேன். முன்னெடுப்பிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

English summary
Nellai Assistant Commissioner Arjunan Saravanan helps Birds man Palpandi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X