திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர்னு வருவேன்.. சீட்டில் இல்லாவிட்டால் சஸ்பென்ஷன்தான்.. கலெக்டர் ஷில்பா கடும் வார்னிங்

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கலெக்டர் ஷில்பா கடும் வார்னிங்

    திருநெல்வேலி: நெல்லை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக அவர் கிராம நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்து வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பாக வைரலாகியுள்ளது. மக்களுக்கு உதவக் கூட முயலாவிட்டால் எப்படி என்று அவர் கிராம நிர்வாக அதிகாரிகளை கடுமையாக கண்டித்துள்ளார்.

    Nellai Collectors Stern Warning to vaos

    தமிழகத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும், விவசாயிகளுக்குமான தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த உதவித்தொகையை பெறுவதற்கு ஏராளமான மக்கள் அந்தந்த கிராமங்களிலுள்ள கிராம நிர்வாக அலுவலகங்களை நாடி சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால் அதிகாரிகள் அங்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திலுள்ள ஏராளமான பகுதிகளிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் உள்ளவர்கள் பட்டியலில் ஏராளமானவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும், தங்களை அந்த பட்டியலில் இணைக்க வேண்டியும் மக்கள் விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் கொடுக்க சென்ற வண்ணம் உள்ளனர்.

    Nellai Collectors Stern Warning to vaos

    இந்த நிலையில் பல பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மக்கள் விண்ணப்பங்களை கொடுக்கவோ பெறுவதற்க்கோ சென்றாலும் அந்தந்த பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் விண்ணப்பங்களை வாங்க மறுக்கிறார்கள் என பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்த தகவல் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் அதிரடி நடவடிக்கையில் குதித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அனைத்து வட்டாட்சியர்களுக்கும் இது தொடர்பாக அலைபேசியில் காரசாரமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், வாட்ஸ் அப்பில் கிராம நிர்வாகி அதிகாரிகளை அவர் கடுமையாக எச்சரிக்கும் ஆடியோவும் வெளியாகி, அதிகாரிகள் மட்டுமல்லாமல் கிராம நிர்வாக பணியாளர் வரை பரவி பரபரப்பை உருவாக்கியுள்ளது. அவரது இந்த அதிரடியான பேச்சு சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

    English summary
    Nellai collector Shilpa Prabhakar has warned VAOs for failing their duties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X