திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலுக்கிய உமா மகேஸ்வரி படுகொலை.. 7 பேரை பிடித்து போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை.. பரபரக்கும் நெல்லை

திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைக்கு என்ன காரணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லையில் பயங்கரம்..! திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உட்பட மூவர் வெட்டிப் படுகொலை...

    நெல்லை: ஹால், பெட்ரூம், கிச்சன் என ஒவ்வொரு ரூமிலும் ஒவ்வொரு கொலை விழுந்து, திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீடே ரத்த வெள்ளத்தில் கிடந்தது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டதற்கு பின்னணி காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமாக 4 ஆண்கள், 3 பெண்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையையும் நடத்தி வருகின்றனர்.

    1996-ம் ஆண்டு சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று மேயரானார் உமா மகேஸ்வரி. மேயராக இருந்தபோது உமா மகேஸ்வரியின் செயல்பாடுகளை எத்தனையோ முறை மனதார பாராட்டியவர் மறைந்த கருணாநிதி.

    கட்சி இவரது செயல்பாடுகளுக்கு காத்து கிடந்தாலும் குடும்ப சூழல் காரணமாக இவர் அரசியலைவிட்டு விலகி இருந்தார். சில வருடங்களுக்கு முன்புதான் இவரது மகன் சாலைவிபத்தில் உயிரிழந்தார்.

    ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச் ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்

    கார்த்திகா

    கார்த்திகா

    இரு மகள்கள், கார்த்திகா மற்றும் பிரியா. உமா மகேஸ்வரி தனது கணவர் முருகசங்கரனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். மகள் கார்த்திகா நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். அம்மா வீட்டுக்குப் பக்கத்திலேயே இவரது வீடு உள்ளது. பிரியா தனது குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வருகிறார்.

    ரத்த வெள்ளம்

    ரத்த வெள்ளம்

    நேற்று காலேஜ் முடிந்து கார்த்திகா 5 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் கதவு சாத்திய நிலையில் இருக்கவும், உள்ளே சென்று பார்த்தார். ஹாலிலேயே உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். கதறி அழுது கொண்டே பெட் ரூமூக்குள் ஓடினால், தந்தையின் சடலம், கிச்சனில் கழுத்து அறுபட்ட நிலையில் வேலைக்கார பெண் மாரி என வீடு முழுதும் ரத்தம் வழிந்து ஓடியது.

    தலையில் தாக்கினர்

    தலையில் தாக்கினர்

    இதன்பின்னர்தான் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து போலீசுக்கு தகவல் தந்து, மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை ஆரம்பமானது. உள்ளே நுழைந்த மர்ம கும்பல், உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களால் 3 பேரின் தலைகளிலும் தாக்கியுள்ளனர். அது மட்டுமில்லை.. கொலையாளிகள். 3 பேரையுமே தனித்தனி ரூமில் வைத்து கொலை செய்துள்ளனர்.

    நகைகள்

    நகைகள்

    விஷயம் அறிந்து முக்கிய காவல்துறை அதிகாரிகளும் உமா மகேஸ்வரி வீட்டிற்கு விரைந்து வந்தனர். உமா மகேஸ்வரி கழுத்தில் கடந்த சங்கிலி, கம்மல், வளையல் போன்றவை காணாமல் போயிருந்தது... வீட்டின் பீரோ திறந்து கிடந்தது.. அதனால் முதல்கட்ட விசாரணையிலேயே நகைகளுக்கான கொலை என்பது தெரியவந்தது.

    சொத்து

    சொத்து

    எவ்வளவு பணம், நகை மொத்தமாக கொள்ளை போனது என்பது உடனடியாக தெரியாமல் இருந்தது. கணவர் முருக சங்கரன் நெடுஞ்சாலை துறையில் இருந்து ரிடையர் ஆனவர் என்பதால், உமா மகேஸ்வரி பெயரில் சொத்துக்கள் நிறைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் காரணமாக சொந்தக்காரர்களுடன் சில பிரச்சனை இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

    தனிப்படை

    தனிப்படை

    அதனால் சொத்துக்காக சொந்தக்காரர்களோ அல்லது நகை, பணத்துக்காக வெளிநபர்களோ இந்த கொலைகளை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால்தான், எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்பதை கண்டறியவே 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி, உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டதற்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

     10 சவரன்

    10 சவரன்

    நடந்த 3 கொலை தொடர்பாக 4 ஆண்கள், 3 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உமா மகேஸ்வரி வீட்டில் இருந்து 15 சவரன் நகை கொள்ளை போனதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 10 சவரன் மற்றும் ரூ. 10,000 பணம் மட்டுமே கொள்ளை போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் உமா மகேஸ்வரிக்கு பெரிய அளவில் பகை இருப்பதாக தெரியவில்லை.

    வீணை வாசிப்பார்

    வீணை வாசிப்பார்

    எல்லோரிடமும் நல்ல முறையில் பழகக்கூடியவர் உமாமகேஸ்வரி.. ரொம்பவும் அமைதியானவர் அவர். மேயராக இருந்தபோது நெல்லை மக்களுக்கு அவர் செய்த செயல்கள் ஏராளம். என்னதான் தீவிரமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், கட்சி நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுதான் வந்திருக்கிறார். நன்றாக வீணை வாசிப்பார் உமா மகேஸ்வரி. சமீபத்தில்கூட நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் வீணை வாசித்து கச்சேரி செய்தார்.

    மக்கள் சோகம்

    மக்கள் சோகம்

    சுற்றுவட்டார பகுதி மக்களின் குடும்ப விழாக்களிலும் கட்டாயம் கலந்து கொள்வார். இதனால் இவருக்கு எதிரிகள் என்பதே குறைவுதான். அதனால்தான் இந்த கொடூர கொலையை நெல்லை மக்களால் இன்னமும் ஜீரணிக்கவே முடியவில்லை.

    English summary
    Nellai DMK Ex Mayor Uma Mahaswari incluing 3 murdered for 15 Sovareigns gold and police investigation going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X