திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மண்டைல கோடு போட்றது.. சைடுல கட்டிங் போட்றது.. இதெல்லாம் வேண்டாமே.. ப்ளீஸ்.. சூப்பர் சார்!

சிகை அலங்கார மாணவர்களுக்கு அரசு பள்ளி முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

நெல்லை: "இனிமேல் படிக்கிற பசங்க மண்டையில் கோடு போடுறது, கட்டிங் போடறது.. இப்படியெல்லாம் வேணாம்.. ப்ளீஸ்.. பள்ளி சூழலுக்கு ஏற்றார் போல் அவங்களுக்கு ஹேர் ஸ்டைல் பண்ணிவிட்டால் போதும்" என்று நெல்லை மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், சிகை அலங்கார நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு லட்டர் எழுதியுள்ளார். இந்த லட்டர்தான் இன்று சோஷியல் மீடியாவில் படுவைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கொஞ்ச நாளாகவே திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளங்களுடன் கைகளில் கயிறு கட்டிக் கொள்கிறார்கள்.. குறிப்பிட்ட கலரில் டிரஸ் அணிந்து கொள்கிறார்கள்.. இதனால் மாணவர்களிடையே சாதிச் சண்டைகள் அதிகமாக எழஆரம்பித்துள்ளது.

இப்படி குற்றச்செயல்களை செய்யும் மாணவர்களுக்கு நீதிமன்றம், போலீசார் இருதரப்புமே.. இவர்கள் திருந்தும் வகையில், "சீர்திருத்த தண்டனை" தந்தும்விடுகிறார்கள். இருந்தாலும் பிள்ளைகள் இப்படி இந்த வயசிலேயே சாதியை கையில் எடுத்திருப்பதை பாடம் கற்று தரும் ஆசிரிய பெருமக்கள் விரும்பவே இல்லை.. அதிகமாக மாணவர்களை பற்றி கவலையும் படுகிறார்கள். இதெல்லாம் போதாது என்று தலையில் வித விதமான ஹேர்ஸ்டைல்களுடன் வருகிறார்கள்.

மார்டன் ஆன மால் இது.. ஆனால் கழிவறை தண்ணீரை எடுக்க வசதி இல்லை.. ஒரு உயிர் அநியாயமா போச்சே!மார்டன் ஆன மால் இது.. ஆனால் கழிவறை தண்ணீரை எடுக்க வசதி இல்லை.. ஒரு உயிர் அநியாயமா போச்சே!

மண்டையில் கோடு

மண்டையில் கோடு

ஸ்கூலுக்கு வர்றதுக்கு இப்படி எதுக்கு ஒரு ஹேர்ஸ்டைல்கள்? யாரும் தலையை படிந்து வருவது இல்லை.. பெப்பரப்பே என்று தலையை விரித்து கொண்டும், மண்டைக்கு நடுவே கோடுகளை வரைந்து கொண்டும், டிசைன் டிசைன் தலையாக கிளாஸ் ரூமில் உட்கார்ந்துள்ளனர்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இந்த கடிதம் சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது. மேலும் இவர் சொல்கிறார், "பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கமான முறையில் தலைமுடியை வைத்துக் கொள்ளவும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களிடையே இது போன்ற வித்தியாசமான சிகை அலங்காரம் செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமூகம்

சமூகம்

அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: "மாணவர்களுக்கு ஒழுக்கத்தை மேம்படுத்துவது ஆசிரியர்களை மட்டும் சார்ந்த விஷயமல்ல. இதில் நம் சமூகத்துக்கும் தொடர்பு உள்ளது. அதில், சிகை அலங்கார நிபுணர்களாகிய நீங்கள் முக்கிய பங்கு வகுக்கின்றீர்கள். உங்களின் செயல்பாடே மாணவர்களின் அகத்தையும், புறத்தையும் அழகுறச் செய்கின்றது.

புதிய தேசம்

புதிய தேசம்

உங்களுக்கு எம் ஆசிரியர் சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.ஓர் சிறு கோரிக்கை - பள்ளி மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல் கோடு போடுதல், BOX CUTTING, ONE SIDE, V CUT, SPIKE போன்றவற்றைத் தவிர்த்து பள்ளி சூழலுக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும். வாருங்கள், ஒற்றுமையோடு ஒன்றுபட்டு புதிய தேசத்தை உருவாக்குவோம்'' என எழுதியுள்ளார்.

அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

இந்த கடிதம் சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது. மேலும் இவர் சொல்கிறார், "பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கமான முறையில் தலைமுடியை வைத்துக் கொள்ளவும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களிடையே இது போன்ற வித்தியாசமான சிகை அலங்காரம் செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோரிக்கை

கோரிக்கை

இது குறித்து பெற்றோர்களும் சரிவர கண்டுகொள்வதில்லை. மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேசெல்ல சொல்ல முடியாத சூழல் உள்ளது. பெற்றோரை அழைத்து வாருங்கள் என்றால் பல மாணவர்கள் பள்ளிக்கே வருவதில்லை. எனவே தீர ஆலோசித்து இதுபோன்ற ஒரு கோரிக்கையை எடுத்து இருக்கிறோம். நிச்சயம் இதற்கு பலன் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
nellai gov school head master srinivasan request to hair stylists about schools students hair style cutting and this letter goes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X