திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. பாஜகவினர் முற்றுகையால் பரபரப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை கண்ணன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை வெளியற்றக்கோரி பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில், இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணனும் பங்கேற்றார்.

Nellai Kannan admitted in hospital due to health problem

அந்த கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாகச் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறத. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசுகையில் சோலியை முடிக்க வேண்டும் என்று பேசியதாக பரபரப்பு வீடியோ ஒன்று வைரலானது.

இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் போலீசில் புகார் அளித்தார்கள்.அதன் பேரில் மூன்று பிரிவின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான் நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான்

இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை பாஜகவினர் தடுத்ததால் பரபரப்பு நிலவியது. ஆம்புலன்ஸை தடுத்த பாஜகவினரை போலீஸ் அப்புறப்படுத்தி வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினர்.

இதையடுத்து பாஜகவினர் மருத்துவமனைக்கு சென்று முற்றுகையிட்டதோடு, நெல்லை கண்ணனை உடனே கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
congress senior leader Nellai Kannan admitted in hospital due to health problem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X