• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கடைசியாக.. உயிர்பிரியும்போது.. ரேகா சொன்ன விஷயம்.. அதிர்ந்த போலீசார்.. யார் அந்த நெல்லை இளைஞர்!

Google Oneindia Tamil News

நெல்லை: ஆஸ்பத்திரியில் உயிர் பிரியும்போது ரேகா மட்டும் வாக்குமூலம் தராமல் போயிருந்தால், இந்த கந்துவட்டி பிரச்சனை வெளியே தெரிந்திருக்காது.. வட்டி பணம் தர முடியாத காரணத்தினால் ஒரு பெண் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டு இறந்துவிட்டார்..!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது வெள்ளங்குளி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பிரதாபன்... இவர் ஒரு குக்.. சென்னையில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.. மனைவி பெயர் ரேகா.. 32 வயதாகிறது.

இவர்களுக்கு பிரவீன் என்ற 11 வயது மகனும், தன்யாஸ்ரீ என்ற 7 வயது மகளும் உள்ளனர்.. பிரதாபன் சென்னையில் வேலைபார்ப்பதால், 2 மாசத்துக்கு ஒருமுறைதான் ஊருக்கு வந்துபோவது வழக்கம்..

இந்தியாவில் மேலும் 54,069 பேருக்கு கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 1,321 பேர் மரணம்இந்தியாவில் மேலும் 54,069 பேருக்கு கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 1,321 பேர் மரணம்

 லாக்டவுன்

லாக்டவுன்

ஆனால், இப்போது லாக்டவுன் போட்டுவிடவும், ஹோட்டல்கள் இல்லை.. வேலையும் இல்லை.. வருமானமும் இல்லை.. ஊருக்கு வந்து சேரலாம் என்றால் பஸ் போக்குவரத்தும் இல்லாமல் இருந்தது.. அதனால், சென்னையிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜுன் 17-ம் தேதி பிரதாபனின் மனைவி ரேகா திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்..

 அலறல்

அலறல்


உடம்பில் நெருப்போடு ரேகா அலறுவதை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. தீவிரமான சிகிச்சை நடந்தபோதே, போலீசாரும் இது சம்பந்தமாக ரேகாவிடம் விசாரித்தனர்.. குடும்ப சூழ்நிலை காரணமாக தீக்குளித்ததாக வாக்குமூலம் தந்தார். இதற்கு பிறகு, மனைவி தீக்குளித்த விஷயம் கேள்விப்பட்டதும் பிரதாபனும் நெல்லைக்கு வந்துவிட்டார்.. சீரியஸான நிலைமையில் இருந்த மனைவியை சென்று பார்த்தபோது, கணவனிடம் மட்டும் ரேகா உண்மையை சொல்லி உள்ளார்..

 இளைஞர்

இளைஞர்

கடன் கொடுத்த இளைஞர் தன்னை தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டியும், அசிங்க, அசிங்கமாக பேசவும் தான் தீக்குளித்ததாக சொல்லி உள்ளார்.. ரேகா இப்படி சொன்னதை பிரதாபன் செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டார். அதை போலீசாரிடம் காட்டி உள்ளார்.. அப்போதுதான், இது குடும்ப சூழல் இல்லை, கடன் விவகாரம் என்று தெரியவந்துள்ளது.. அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரிடம் ரேகா 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்..

 வறுமை

வறுமை

கடந்த வருடம் லாக்டவுன் போட்டுவிடவும், அப்போதும் இப்படியேதான் வறுமை சூழ்ந்துள்ளது.. அதனால், 10 ஆயிரம் ரூபாயைவட்டிக்கு வாங்கி, தொடர்ந்து வட்டியும் கொடுத்து வந்துள்ளார். மறுபடியும் லாக்டவுன் போடவும், ஊரடங்கு முடிந்ததும், வேலை மறுபடியும் வந்துவிடும், பணத்தை தருகிறேன் என்று ரேகா அந்த இளைஞரிடம் எவ்வளவோ சொல்லி உள்ளார்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

ஆனால், வட்டி பணம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த இளைஞர், ரேகாவையும், குடும்பத்தையும் அவதூறாக பேசி துன்புறுத்தி இருக்கிறார்.. அசிங்கமாக பேசியதுடன், "இதுகுறித்து வெளியே சொன்னால், உன்னுடைய குழந்தைகளை கொன்று விடுவேன்" என்று ரேகாவிடம் மிரட்டியும் இருக்கிறார்.. அதனாலேயே ரேகா விஷயத்தை வெளியே சொல்லவில்லை.. ஒருகட்டத்தில் இளைஞரின் வார்த்தைகள் எல்லை மீறவும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாகவும், தற்கொலைக்கு தூண்டிய அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரேகா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

 இசக்கிமுத்து

இசக்கிமுத்து

இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இப்படித்தான் 3 வருடத்துக்கு முன்பு இசக்கிமுத்து என்பவர் தன் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் ஆபீசில் தற்கொலை செய்து கொண்டார்.. அதற்கு பிறகும் இந்த பிரச்சனை ஓயவில்லை.. லாக்டவுன் வறுமை காரணமாகவும், கந்துவட்டி பிரச்சனை காரணமாகவும் எண்ணற்ற உயிர்கள் இப்படி பறிபோய் கொண்டிருக்கின்றன..!

English summary
Nellai Woman committed suicide due to debit issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X