• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அடித்தளமே இல்லாமல் பில்டிங்... நெல்லை பள்ளி விபத்தின் பகீர் பிண்ணனி!

Google Oneindia Tamil News

திருநெல்வேலி : நெல்லையில் பள்ளி மாணவர்களின் உயிரை பலி கொண்ட கட்டிட விபத்தின் முதற்கட்ட விசாரணையில் அடித்தளம் எனப்படும் பேஸ்மட்டமே அமைக்கப்படாமல் வெறுமனே சுவர் மட்டும் கட்டி கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

  நெல்லை: அதிர்ச்சி சம்பவம்... கழிவறை தடுப்பு சுவர் இடிந்து விபத்து… பள்ளி மாணவர்கள் 3 பலி!

  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பொருட்காட்சி அருகே டாக்டர் எனும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவர்கள் சென்ற போது , முன்புற சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

   காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது

  கட்டிட இடிபாடுகளில் சிக்கி இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மாணவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்தது மேலும் படுகாயமடைந்த நான்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  இந்நிலையில் விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் இனி வரும் காலங்களில் விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார் பலியான மாணவர்கள் மற்றும் காயமடைந்த மாணவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

  நிவாரணம் அறிவித்த முதல்வர்

  நிவாரணம் அறிவித்த முதல்வர்

  இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி கழிவறை இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார் மேலும் இந்த துயரச் சம்பவத்தை அறிந்து தான் மிகவும் வேதனை விட்டதாகவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

  பள்ளியில் ஆய்வு

  பள்ளியில் ஆய்வு

  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தவுள்ளதாகவும், 48 மணி நேரத்தில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து விபத்தில் பலியான மாணவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தும் பணியும் தொடங்கியது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் மாணவர்களின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வு முடிந்ததும் அடுத்தடுத்து மாணவர்களின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  அதிர்ச்சி தகவல்

  அதிர்ச்சி தகவல்

  இந்த நிலையில் பள்ளியில் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின் அடிப்படையில் பள்ளியில் மாணவர்களின் உயிரை பலி கொண்ட கழிப்பறையின் சுற்றுச்சுவர் ஃபேஸ்மட்டம் எனப்படும் அடித்தளம் இல்லாமாலே மேம்போக்காக பெயருக்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கட்டிட பகுதிகளும் மழையால் சேதமடைந்துள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளியில் உள்ள மற்ற கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்தும் ஆய்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  English summary
  District Collector Vishnu has released information that during the preliminary investigation of the building accident that claimed the lives of school children in Nellai, only toilet was built without laying the foundation.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X