திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் அய்யாபுரம் கிராமத்தில் புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

வீட்டிற்கு ஒரு நூலகம் தேவை என்ற பேரறிஞர் அண்ணாவின் கூர்வாக்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் தமிழறிஞர் பேராசிரியருமான மு.பி.பா என்கிற மு.பி.பாலசுப்பிரமணியன்.

New library opening in Ayyapuram, Nellai district

அவரின் 80 வது முத்து விழாவை முன்னிட்டுத் தான் அவரது பிறந்த பூமியான நெல்லை மாவட்டத்தின் தென்காசி வட்டத்தில் உள்ள அய்யாபுரம் கிராமத்தின் காந்தி தெருவில் அமைக்கப்பட்ட புதியநூலகத்தினை கடந்த மே 16 அன்று பட்டித்தொட்டி யெல்லாம் பட்டிமன்றம் புகழ் ஓங்கும் நடுநாயகர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், சாகித்தியஅகாடெமி விருதாளர், எழுத்தாளருமான பொன்னீலன் ரிப்பன் வெட்டிக் குத்து விளக்கேற்றி முகூர்த்தத்தில் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டதின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர், பேராசிரியைப் பெருந்தகைகளான அழகேசன், ஜாஸ்மீன் ஆசீர், பாவளன் அரச பேராசிரியர் மு.பி.பா அறக்கட்டளை அறங்காவளர்களான
பா. இன்பவல்லி, முனைவர்பா. கலையரசி, முத்துக்குமரன், முத்துமிழ்செல்வன், உள்ளிட்ட பல் துறைச் சான்றோர்கள் ஊர்மக்கள் என்று பெரிய தொரு கூட்டமே திரண்டிருந்தது. மட்டுமல்ல, பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் வந்து நூலகத் திறப்பைச் சிறப்பித்தனர்.

New library opening in Ayyapuram, Nellai district

பேராசிரியர் மு.பி.பா.வின் தமிழ்வளர்ச்சி, அவரின் தமிழ்தொண்டு பற்றியவைகளுக்குள் போவதற்குமுன், ஐயாவின் பூர்வீகம்பற்றி ஒரு எட்டு பார்த்து விடலாம். இதே அய்யாபுரம் கிராமத்தின் பிச்சைமுத்து, கண்ணியம்மாள் தம்பதியரின் மகன் தான் மு.பி.பா 16.05.1939-ல் பிறந்தவர்.

பேராசிரியரானமு.பி.பாவின் மனைவியான இன்பவல்லியும், இதேகிராமத்தைச் சேர்ந்தவரே. ஆரம்பத்தில் எம்.ஏ.தமிழ். பி.எச்.டி. முனைவர் பட்டம்பெற்றவர். பின்பு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தமிழ்பேராசிரியர் பணியிலிருந்தவர்.

தொடர்ந்துசென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு மாறுதலானார். கவிதைமேகங்கள், வாணிதாசன் கவிதைஓர்ஆய்வு, மணமல்லி, உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதி தமிழுக்குச் சிறப்பு செய்துள்ளார்.
குறிப்பாக இவரின் கவிதை மேகங்கள் என்கிற புத்தகம் கல்லூரி பாடமாகவும் இடம் பெறுமளவுக்குச் சிறப்புப் பெற்றது மல்லாமல் கவிதைகள் பள்ளிப்பாடப்புத்தங்களிலும் இடம்பிடித்துள்ளது, கவனிக்கத்தக்க தமிழ்தொண்டு.

இதுபோன்று மு.பி.பா தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமில்லாமல் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, கனடா, சுவிட்சர்லாந்த், என கடல் கடந்துதூர கிழக்குநாடுகளிலும்ப ல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தமிழ்மொழிக்கும், தமிழகத்திற்கும் பெருமைசேர்த்தவர் பேராசிரியர்மு.பி.பா.

தற்போது தமிழாலயம், எனும் இரண்டு மாதம் ஒருமுறை பருவ இதழினையும் கடந்த 17 வருடங்களாக நடத்தி வரும் மு.பி.பா. மத்தியஅரசின் தணிக்கைக்குழு உறுப்பினராகவும், தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறையின் கீழ்செயல்பட்டு வரும் அறிவியல் தமிழ்மன்றத்தில்துணைத்தலைவராகவும் இருந்தவர்.

பேராசிரியர்மு.பி.பாவின் தமிழ்சிறப்புத் தொண்டினைப் பாராட்டும் வகையில் அவரது 80- வது பிறந்த நாளின்போதே நூலகம் திறக்கப்பட்டதோடு உடன் அறக்கட்டளையும் தொடங்கப்பட்டது. வீட்டிற்கு ஒரு புத்தகச்சாலை தேவை என்றார் பேரறிஞர்அண்ணா. ஒரு நூலகம் திறந்தால் ஒருசிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும் என்பது விவேகானந்தரின் வாக்கு. பிரான்சிஸ்பேகனின் கணிப்பு வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்பதே.

அந்த அடிப்படையில் தான் இந்தநூலகம்திறக்கப்பட்டது என்கிறார்கள் பேராசிரியர்கள். பெயரளவில் நூலகம் என்றில்லாமல் அதுபுத்தங்களின் புதையலாகவே உள்ளது. திராவிட இயக்கநூல்கள்,வரலாற்றுநூல்கள், இந்திய தமிழகஅளவில் நடைபெறுகிற சிவில் சர்வீஸ், குரூப் தேர்வுகள் டி.ன்.பி.எஸ்.சி, நேவிஎஸ்.எஸ்.இ, வங்கித்தேர்வுகள், ஆர்.ஆர்.டி. வனத்துறை, இந்துசமயம், மற்றும் அறநிலைத்துறை.

உதவிஆய்வாளர் உள்ளிட்ட பலதரப்பட்ட அரசுத்துறைப் போட்டிகளுக்கான புத்தங்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவும், மருத்துவம், நீட்தேர்வு, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வு புத்தங்களுடன், இலக்கிய இலக்கண ஆய்வுநூல்கள், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் உள்பட தமிழ் வளர்ச்சிக்கானது என்று நகரத்திற்கு இணையான தொரு மெகாநூலகத்தை உள்ளடக்கிய மு.பி.பா.வின்அய்யாபுரம் நூலகம், நாட்டுநடப்பை அறிய தினசரி நாளிதழ்களும் இடம்பெற்றுள்ளன.

English summary
New library opening in Ayyapuram, Nellai district. There are a lot of participants in the local public
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X