திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிரம்பி வழியும் பாபநாசம் மணிமுத்தாறு அணைகள்... 40ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - தாமிரபரணியில் வெள்ளம்

தொடர்மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: விடாது கொட்டி வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வழிகின்றனர். அணைகளின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணியில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும்..

Papanasam Manimuttaru dams overflowing flood in Tamirabarani

தாமிரபரணி ஆற்றில் 40,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆற்றங்கரைக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளைப் பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது மாவட்டம் முழுவதும் 188 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும்., அம்பாசமுத்திரம் ஆலடியூரை சேர்ந்த 50 பேர் முன்னெச்சரிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக வெள்ள பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். இதனிடையே அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 50 பேர் திருநெல்வேலிக்கு விரைந்துள்ளனர்.

அலறிய அம்மாசி.. மண்வெட்டியால் மண்டயை பிளந்த முரளி.. கொஞ்சநேரத்தில் போர்க்களமான டீக்கடை அலறிய அம்மாசி.. மண்வெட்டியால் மண்டயை பிளந்த முரளி.. கொஞ்சநேரத்தில் போர்க்களமான டீக்கடை

இதே போல மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

English summary
Papanasam and Manimuttaru dams in Tirunelveli district are overflowing due to heavy rains. Due to the safety of the dams, 40,000 cubic feet of water is released per second, causing floodwaters to overflow in Tamiraarani. People living along the coast have been warned to stay safe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X