திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடு அந்த மஞ்சப் பையை.. நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் பழைய குரல்

தென்னை ஓலைகளால் பின்னப்பட்ட கிண்ணங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாளை முதல் அமலாகும் பிளாஸ்டிக் தடை... மீண்டும் வருகிறது மஞ்சப்பைகள்- வீடியோ

    நெல்லை: "எடு அந்த மஞ்ச பையை" என்று சொல்லும் நிலை நாளை முதல் ஏற்பட போகிறது. ஆனால் பிளாஸ்டிக் ஒழிக்கும் முயற்சியை இன்றே எடுத்துவிட்டது ஒரு ஸ்வீட் ஸ்டால்!!

    துணிகடை முதல் கறி கடை வரை வீட்டிலிருந்து கிளம்பினாலும், ஹாயாக கையை வீசிக் கொண்டுதான் போவோம். அதற்கு காரணம், எதை பொட்டலம் கட்டினாலும், மூட்டை கட்டினாலும் கடைக்காரர்களே அதை பையில் போட்டு தந்துவிடுவார்கள் என்ற தைரியம்தான்.

    வாங்கிய பொருட்களுக்கு பில் போடும்போதே, இன்னொரு கை அங்கே பரபரவென்று பிளாஸ்டிக்கை விரித்து கொண்டிருக்கும். நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பிளாஸ்டிக் உபயோகிக்க முற்றிலும் தடை செய்யப்பட்டு, அது நடைமுறையிலும் உள்ளது. கடைக்கு மீன் வாங்க போனால்கூட பேப்பரில்தான் வைத்து சுற்றி தருவார்கள்.

    குழம்பி உள்ளனர்

    குழம்பி உள்ளனர்

    குறைந்த விலை, கைக்கு எளிதாக, தூக்கி செல்ல வசதியாக பிளாஸ்டிக் கவர்கள், நாளை முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பிளாஸ்டிக் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்துவிடவும், பிளாஸ்டிக் விரும்பிகள் திருதிருவென முழிக்கிறார்கள். இதை வரவேற்பதா, எதிர்ப்பதா என தெரியாமல் சிலர் குழம்பியும் உள்ளனர்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு

    பிளாஸ்டிக் ஒழிப்பு

    இந்நிலையில், நெல்லை கடைத்தெருவில் ஹாரிகா என்ற ஒரு ஸ்வீட் ஸ்டால் உள்ளது. பார்ப்பதற்கு சின்ன கடைதான். ஆனால் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு தன் முழு ஒத்துழைப்பை முதலாவதாக தந்துள்ளது. கடைக்கு ஒருவர் சென்று சில ஸ்வீட்களை வாங்குகிறார்.

    தென்னை ஓலைகள்

    தென்னை ஓலைகள்

    வழக்கமாக சுவரில் தொங்கி கொண்டிருக்கும் ஒரு கவரை உருவி அதில் நுழைத்து திணித்து அனுப்புவார்கள். ஆனால் இந்த ஸ்வீட் ஸ்டாலில், தென்னை ஓலைகளால் பின்னப்பட்ட கிண்ணங்கள் உள்ளன. வாங்கும் ஸ்வீட்களை அதில் போட்டு தருகிறார்கள்.

    வித்தியாசமாக உள்ளது

    வித்தியாசமாக உள்ளது

    அது மட்டுமில்லை, அதற்கு ஒரு மூடியும் உள்ளது. அதுவும் தென்னை ஓலைகளால் பின்னப்பட்டுள்ளது. இளம்பச்சை ஓலை கிண்ணங்களில் ஸ்வீட்களை போட்டு அதற்கு மூடி போட்டு அனுப்புகிறார்கள். இதை பார்க்கவே வித்தியாசமாக உள்ளது.

    உலகம் உருண்டை

    உலகம் உருண்டை

    அன்று இதே தென்னை ஓலை கிண்ணங்கள் ஆகட்டும், மஞ்சள் பைகள் ஆகட்டும், அவற்றினை இளக்காரமாகவும், பட்டிக்காட்டுத்தனமாகவும் இளசுகள் பார்த்த நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் அனைவருமே மீண்டும் அன்றைய நாட்களுக்கு திரும்பும் நிலை வந்துவிட்டது. உலகம் ஒரு உருண்டை என்றும் புரிந்துவிட்டது.

    English summary
    Nellai Sweet Stall using Banana Leaf for packing due to no Plastic
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X