திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரியில் காட்டுக்குள் குஜால்.. பகலில் பிச்சை எடுப்பது போல நடிப்பார்.. இப்ப கம்பி எண்ணுகிறார்

காட்டுக்குள் பதுங்கி இருந்த திருடனை நெல்லை போலீசார் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Athiri Malai : கையும் களவுமாக பிடிபட்ட சுப்பிரமணி யார்?- வீடியோ

    நெல்லை: ராத்திரி நேரத்தில் காட்டுக்குள்ளே ஒரு குடிசை.. குடிசையில் பெண்கள்.. பெண்களுடன் சுப்பிரமணி! இந்த சுப்பிரமணியைதான் போலீசார் கொத்தோடு பிடித்து கொண்டுபோய் விட்டனர்!

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது அத்திரிமலை. இங்குள்ள கோரக்கநாதர் கோயிலுக்கு போக வேண்டுமானால் கல்லாற்றை கடந்துதான் போக வேண்டும். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் மட்டுமே இங்கு போக வனத்துறை அனுமதி தரும்.

    இந்தக் கல்லாற்றின் பக்கத்தில் ஒரு ஓலை குடிசை இருந்தது. நைட் நேரத்தில் இங்கு நடமாட்டம் தெரியவும், சம்பந்தப்பட்ட அந்த நபர் வனத்துறையினரிடம் சிக்கிவிட்டார்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    "இங்கெல்லாம் வரக்கூடாது" என்று எச்சரித்து வனத்துறை ஊழியர்கள் அவரை விரட்டி உள்ளனர். ஆனாலும் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது. அதனால் வனத்துறையினர் ரகசியமாக அந்த நபர் யார், எதற்காக இங்கு வந்து போகிறார் என்பதை கண்காணித்தனர்.

    சுப்பிரமணி

    சுப்பிரமணி

    பிறகு கையும் களவுமாக பிடித்து நடத்திய விசாரணையில், அப்போதுதான் காட்டுக்குள் குடிசை அமைத்து தங்கி வருபவர் சுப்பிரமணியன் என்பதும், விருத்தாசலம் அடுத்த ஐவதகுடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவரது பொழப்பே, மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் நடித்து, ரயில்களில் கொள்ளை அடிப்பதுதானாம்.

    பிச்சை

    பிச்சை

    அழுக்கு சட்டை, அழுக்கு காவி வேஷ்டிதான் இவரது யூனிபார்ம். முகத்தில் ஒரு சோகம்.. இதுஅவரது ட்ரேட்மார்க். எந்த ரயில் வருமோ அதில் சுப்பிரமணி ஏறி கொண்டு, பிச்சை எடுப்பார். கம்பார்ட்மென்ட்டில் தனியாக பெண்கள் மட்டும் இருந்தால் செயினை பறித்து எஸ்கேப் ஆகுவார்.

    கைது

    கைது

    இப்படி கொள்ளையடித்த பணத்தில் கஞ்சா அடிப்பார், பெண்களை காட்டுப்பகுதி குடிசைக்கு இரவு நேரங்களில் அழைத்து வந்து ஜாலியாக இருப்பார். இப்படியே 5 வருஷம் ஓடியிருக்கிறது. பகலில் கொள்ளை, இரவில் குஜால் என வாழ்ந்து வந்த சுப்பிரமணி, இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

    English summary
    Thirunelveli Police have arrested a thief, who robbery in the trains and hiding deep forest
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X