திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்ஸ்பெக்டர் தலையில் நெளிந்த விஷபாம்பு.. கழுத்தில் மாலையாக சுற்றி கெத்து நடை.. வைரலாகும் வீடியோ

பாம்பை லாவகமாக பிடித்த இன்ஸ்பெக்டர் சாம்சனின் வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    சாரைப்பாம்பை தலையில் தூக்கிச்சென்ற இன்ஸ்பெக்டர்.. வைரல் வீடியோ

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சாம்சன், கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்றை தனது கையால் பிடித்து பத்திரமாக ஓடைக்குள் இறக்கி விட்ட காட்சி, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் சாம்சன். இவருக்கு விலங்குகள் என்றால் ரொம்ப பிரியமாம். அதிலும் பாம்பு பிடிப்பதில் இவர் வல்லவராம்.
    இந்நிலையில், ரெட்டியார்புரம் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கான பந்தோபஸ்து பணியில் சாம்சன் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு டீக்கடையில் பொதுமக்கள் டீ குடித்து கொண்டிருந்தனர்.

    Police Inspector caught the snake Video

    திடீரென கடைக்குள் இருந்து வந்த பாம்பை கண்டதும், டீ கிளாஸை தூக்கி போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடினர்.
    இதை கவனித்த சாம்சன், உடனே டீக்கடைக்குள் புகுந்து, சாரை பாம்பை லபக்கென பிடித்து கொண்டு வெளியே வந்தார். ஆனால், அந்த பாம்பு, சாம்சனின் தோளில் ஊர்ந்து சென்று அவரது தலை மீது ஏறி நின்று கொண்டது.

    ஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோ

    கொஞ்சமும், பயமும், பதட்டமும் இல்லாத சாம்சன், அந்த பாம்பை இழுத்து தனது கழுத்தில் சுற்றி மாலை போட்டுக் கொண்டு சிரித்தவாறே நகர்ந்து சென்றனர். கொஞ்ச தூரம் போனதும் ஒரு ஓடை வந்தது. அங்கு மெதுவாக தனது தோளை சாம்சன் சாய்த்தும், பாம்பும், உடனே ஊர்ந்து வந்து கீழே இறங்கி ஓடைக்குள் பத்திரமாக புகுந்து சென்றது.

    இந்த காட்சியை பலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் போட்டுவிட்டனர். இப்போது இன்ஸ்பெக்டர் சாம்சனுக்கு ஒரே அப்ளாஸ்தான்!

    English summary
    Veeravanallur police Inspector caught the Poisonous snake and this video goes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X