திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

100 பேரை விசாரிச்சாச்சு.. ஒரு துப்பும் துலங்கலை.. உமா மகேஸ்வரி வீட்டில் சிபிசிஐடி திடீர் ஆய்வு!

உமா மகேஸ்வரியை கொன்றது ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை மாநகர முன்னாள் மேயர் கொலை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..

    நெல்லை: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியை கொன்றது யார் என்ற விசாரணை இன்னும் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், திடுதிப்பென்று அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசந்திரன், வீட்டு வேலைக்கார பெண் மாரி ஆகிய 3 பேரையும் ஒவ்வொரு ரூமில் வைத்து கொலை செய்தனர்.

    கொலையாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததால் இந்த விவகாரத்தில் பரபரப்பு அதிகமானது. மேலும் தலித் மற்றும் ஆதிவாசி பட்டிலியன ஆணையம் 3 நாளில் இதை பற்றி பதிலளிக்குமாறு தமிழக டிஜிபிக்கும், மாவட்ட காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் விசாரணையை இன்னும் தீவிரமாக்கி விட்டது.

    மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.. வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு.. வீதிகளில் மக்கள் தஞ்சம் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.. வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு.. வீதிகளில் மக்கள் தஞ்சம்

    3-வது நாள் விசாரணை

    3-வது நாள் விசாரணை

    3 தனிப்படை அமைத்து 3 நாளாக கொலையாளிகளை தேடி வருகிறார்கள் போலீசார். உமா மகேஸ்வரி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகை, மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றதால், இது நகைக்கான கொள்ளையாகவே முதலில் பார்க்கப்பட்டது. நேற்றுகூட, கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

    கொடூர கொலை

    கொடூர கொலை

    உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் ஆழத்துக்கு கத்தியால் குத்தி... கொடூரமாக திருகி கொலை செய்துள்ளதாக ரிப்போர்ட் வந்துள்ளதால், இந்த கொலை முன்விரோதமா, சொத்துக்காகவா, அரசியல் விரோதமா, நகை, பணத்துக்காகவா என்ற ரீதியில் கேள்விகள் நாலாபக்கமும் துளைத்தெடுத்தன.

    சீனியம்மாள்

    சீனியம்மாள்

    அந்த பெண் யாராக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் அவர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்தப்பட்டது பல்வேறு அதிர்ச்சியை தந்துள்ளது. திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்தவர்தான் சீனியம்மாள். இவரை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி உமா மகேசுவரி பண மோசடி செய்ததாக கூறப்பட்டது. அதனால் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.

    விசாரணை

    விசாரணை

    போலீசாரோ, துருவி துருவி இவரிடம் பல கேள்விகளை மடக்கி மடக்கி கேட்டுள்ளனர். அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்த சீனியம்மாள், எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பதாக தெரிவித்தார். இதனால் சீனியம்மாளிடம் நடத்தி விசாரணயில் முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில், உமா மகேஸ்வரியின் சொந்தக்காரர்களிடம் விசாரணை திரும்பி உள்ளதாக சொல்லப்பட்டது

    செல்போன் டவர்

    செல்போன் டவர்

    எப்படி பார்த்தாலும் கொலையை செய்தது, உமா மகேஸ்வரின் நெருக்கத்துக்கு ஆளானவர்கள்தான் என்பதில் போலீஸ் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமில்லை, பெண்கள் உட்பட 3 ஆண்கள் மீதும் போலீசாரின் சந்தேக பார்வை வலுவாக விழுந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட பெண் யார் என்று தெரியவில்லை. சம்பவத்தன்று நெல்லையில் காட்டிய செல்போன் டவர் தற்போது மதுரையை காட்டுவதால், விரைந்துள்ளனர் போலீசாரும்.

    யார் அந்த பெண்?

    யார் அந்த பெண்?

    சொந்தக்காரர்களா, அரசியல் சம்பந்தப்பட்டவர்களா, வடமாநிலத்தவரா, கொலை செய்தது யார் என்றே தெரியாமல் 3 நாட்களாக போலீசார் விழி பிதுங்கி வரும் நிலையில், இப்போது ஒரு பெண் கொலையாளியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது, இருக்கிற பரபரப்பில் கிலோ கணக்கில் டென்ஷனை ஊற்றுவது போல் இருக்கிறது!

    சிபிசிஐடி

    சிபிசிஐடி

    சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். மேலும், சொந்தக்காரர்கள் உள்பட 100 பேரிடம் போலீசார் விசாரணை இதுவரை நடத்தப்பட்டது. இந்நிலையில் உமாமகேஸ்வரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வு

    ஆய்வு

    வீட்டுக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். உயிரிழந்த 3 உடல்கள் கிடந்த இடங்களை போட்டோக்களாக பதிவு செய்து கொண்டனர். இதை பற்றி கேட்டதற்கு, ஏற்கனவே சிபிசிஐடி விசாரணயில் இருக்கிற கொலை, கொள்ளை சம்பவங்களுடன், இந்த கொலை ஒத்துப் போகிறதா என்பதை ஆய்வு செய்யவே வந்ததாக கூறினார்கள்.

    English summary
    Thirunelveli DMK EX Mayor Uma maheswari murder case and police investigation is going on 3rd day
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X