திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமரனை தேடும் போலிஸ்!

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரான பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமரனை போலீசார் தேடி வருகின்றனர்.

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் ஜூலை மாதம் 10 ம் தேதி மக்களின் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் அணுசக்திக்கு எதிரான அமைப்பை சேர்ந்தவரும் பச்சைத் தமிழகம் கட்சித்தலைவருமான உதயகுமரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Police searching SP Udhayakumaran opponent of Kudankulam Nuclear Reactor

தேசிய அணுமின் கழகம் கூடங்குளத்தில் அணுமின் நிலைய எரிபொருள் கழிவுகளை சேமிக்கும் வளாகம் கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஊருல என்ன பிரச்சினை.. லிஸ்ட் போடுங்க.. கலெக்டர் கிட்ட கொண்டு போய் கொடுங்க.. சீமான் அதிரடி! ஊருல என்ன பிரச்சினை.. லிஸ்ட் போடுங்க.. கலெக்டர் கிட்ட கொண்டு போய் கொடுங்க.. சீமான் அதிரடி!

அரசியல் கட்சிகள், கட்சி சாரா அமைப்புகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெர்வித்து வரும் சூழலில் அரசு இதற்காக பொது மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டத்தை வரும் ஜூலை 10ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளது. முதலில் ராதாபுரத்தில் இந்த கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு காரணம் கருதி திருநெல்வேலிக்கு இந்த கூட்டம் மாற்றப்படும் என்று தெரிகிறது.

அரசின் முயற்சிகள் இப்படி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அணுக்கழிவுகளை கூடங்குளத்தில் புதைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருவோர் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் அரசுக்கு தங்களது எதிர்ப்பை காண்பிக்க கூடி ஆலோசிக்கவும் திட்டமிட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப உதயகுமாரன் நேற்று நாகர்கோயிலில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரை கண்காணிக்கவும் அவரது பின்தொடரவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர் நெல்லை வந்ததும் அவரை கண்காணிக்கும் பொருட்டு போலீசார் நெல்லை பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.

இதற்கிடையே நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் புறப்பட்டு வந்த உதயகுமாரன் பேருந்து நாங்குனேரியை தாண்டியதும் பேருந்தில் இருந்து மாயமாகியுள்ளார். நாங்குநேரி அருகே இறங்கிய உதயகுமாரன் அங்கிருந்து ஒரு காரில் புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் நெல்லையில் உதயகுமாரன் கலந்து கொள்ளவிருந்த ஆலோசனைக் கூட்டம் நெல்லை வீரமானிக்க புரத்தில் உதயகுமாரன் இன்றியே நடந்து முடிந்துள்ளது. உதயகுமாரன் நெல்லைக்கு வருவார் என்று காத்திருந்த போலீசார் ஒவ்வொரு பேருந்தாக உதயகுமரனை தேடியுள்ளனர்.

English summary
Police searching SP Udhayakumaran opponent of Kudankulam Nuclear Reactor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X