திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அணுக்கழிவை எதிர்த்த நாங்க தேச துரோகிகள்.. அப்ப கர்நாடகா பாஜக?.. பூவுலகின் நண்பர்கள் பொளேர் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    அணுகழிவுகளை கொட்டுவது குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

    நெல்லை: தமிழிசை சவுந்திரராஜன், நாராயணன் திரிபாதி உள்ளிட்ட பாஜக பிரமுகர்களை டுவிட்டரில் டேக் செய்துள்ள பூ உலகின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சுந்தர்ராஜன், அணுக்கழிவை தமிழகத்தில் வைக்க விடமாட்டோம் என்று சொன்னால் நாங்கள் தேசதுரோகிகள், அணுக்கழிவுகளை அனுமதிக்கமாட்டோம் என்று சொன்ன கர்நாடகா பாஜக? யார் கைகூலிகள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அணுமின்சாரம் வெற்றிகரமாக உற்பத்தியாகிவரும் நிலையில் அணுகழிவுகளை கொட்டுவது குறித்து இதுவரை மத்தியஅரசு முடிவெடுக்காமல் இருந்து வந்தது. அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே அமைக்கலாமா என்பது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரும் ஜுலை 10ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தின் கூடங்குளத்தில் ஏற்கனவே அணுமின்நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அணுகழிவுகளையும் தமிழகத்தில் கொட்டப்படலாம் என்பதால், இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில் விழுந்த 'வெள்ளை பேன்ட்'! பொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில் விழுந்த 'வெள்ளை பேன்ட்'!

    தமிழிசை விளக்கம்

    தமிழிசை விளக்கம்

    இதற்கிடைய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், விளக்கத்தை அறியும் முன்பே அணுக்கழிவு மையம் ஆபத்தானது என்று மக்களை குழப்புகிறார்கள் என்றும் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்களில் பலமடங்கு நாம் முன்னேறியுள்ளோம் என்றும் செய்தியாளர்களிடம் அண்மையில் கூறினார்.

    கோலாரில் கொட்ட எதிர்ப்பு

    கோலாரில் கொட்ட எதிர்ப்பு

    இதற்கிடையில் கர்நாடகா மாநிலம் கோலாரில் உள்ள செயல்படாமல் சுரங்கத்தில் அணுக்கழிவுகளை கொட்டுவது குறித்து அரசு ஆலோசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி கசிந்த தகவலால், கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக கர்நாடகாவில் எதிர்கட்சியாக உளள பாஜக, கர்நாடகாவில் அணு கழிவுகளை கொட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி உள்ளது. கோலாரில் கழிவுகளை கொட்டும் முடிவு எடுத்தால் அதற்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தும் என்றும். மத்தியஅரசு இங்கு அணுகழிவுகள் கொட்டப்படாது என்று உறுதி அளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

    யார் கைகூலிகள்

    இது தொடர்பான பாஜகவின் டுவிட்டர் பதிவினை டேக் செய்துள்ள பூஉலகின் நண்பர்கள் குழுச்சேர்ந்த சுந்தர்ராஜன் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
    தமிழிசை சவுந்திரராஜன், நாராயணன் திரிபாதி உள்ளிட்ட பாஜக பிரமுகர்களை டுவிட்டரில் டேக் செய்துள்ள சுந்தர்ராஜன், அணுக்கழிவை தமிழகத்தில் வைக்க விடமாட்டோம் என்று சொன்னால் நாங்கள் தேசதுரோகிகள், அணுக்கழிவுகளை அனுமதிக்கமாட்டோம் என்று சொன்ன கர்நாடகா பாஜக? யார் கைகூலிகள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    மக்கள் நலன்

    மக்கள் நலன்

    இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள், கர்நாடகாவில் இருக்கும் தலைவர்கள் மக்களின் நலனை மதிக்கிறார்கள் , அதனால் வெற்றி பெறுகிறார்கள் ஆனால் தமிழத்தில் பாஜக தலைவர்கள் அப்படி இல்லாததால் தான் இப்படி தோல்வி அடைகிறார்கள் என விமர்சித்துள்ளனர்.

    English summary
    if We do not allow Nuclear waste called us anti national, but kartanka bjp also oppose Nuclear waste, so who anti national? Poovulagin Nanbargal Sundararajan ask bjp leaders
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X