திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி.. கார்ப்பரேட் முதலாளிகளின் பிரதிநிதி... வைகோ பொளேர் பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் மோடி கார்ப்பரேட் முதலாளிகளின் பிரதிநிதி - வைகோ- வீடியோ

    நெல்லை:கார்ப்பரேட் கம்பெனிகளின் பிரதிநிதி பிரதமர் மோடி என்றும், 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 140 தொகுதிகளை கூட பாஜக எட்ட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    மத்தியில் பாஜக அரசு அமைந்தால் நல்லது என்று கூறிய வைகோ. 2014ம் ஆண்டு அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். பின்னர் குறுகிய காலத்தில் பல காரணங்களை கூறி, அந்த கூட்டணியில் இருந்து விலகினார்.

    மத்தியில் செயல்படும் பாஜக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என்றும், குறிப்பாக தமிழக மக்களுக்கும், தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் வைகோ கூறி வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக பல தருணங்களில் போராட்டங்களையும் அவர் அறிவித்து நடத்தியுள்ளார்.

    பேட்டியளித்தார் வைகோ

    பேட்டியளித்தார் வைகோ

    இந் நிலையில் கார்ப்பரேட் கம்பெனிகளின் பிரதிநிதி பிரதமர் மோடி என்றும், 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 140 தொகுதிகளை கூட பாஜக எட்ட முடியாது என்று வைகோ கூறியுள்ளார். நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    வாஜ்பாயின் தகுதி

    வாஜ்பாயின் தகுதி

    அப்போது வைகோ கூறியதாவது: வாஜ்பாயின் பெயரை உபயோகிக்கும் தகுதியை இந்த 4 ஆண்டுகளில் மோடி இழந்து விட்டார். அவர் குஜராத் முதலமைச்சர் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று வாஜ்பாய் முடிவெடுத்தார்.

    அத்வானி காப்பாற்றினார்

    அத்வானி காப்பாற்றினார்

    அப்பொழுது அத்வானி தான் மோடியை காப்பாற்றினார்.வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எவ்வளவு உதவுயாக இருந்தாரோ அதே வழியை பின்பற்றுவீர்களா என்று நான் கேட்டேன்... அதற்கு கண்டிப்பாக பின்பற்றுவேன் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்தார்.

    கூட்டணியில் இணைந்தேன்

    கூட்டணியில் இணைந்தேன்

    அதனால் தான் நான் கூட்டணியில் சேர்ந்தேன்.. ஆனால் பதவி ஏற்ப்புக்கு முன்பே தலையில் கல்லை தூக்கி போட்டது போல் கொலைகாரன் ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு அழைத்து வந்தார். அதை நான் எதிர்த்து கருப்பு கொடி போராட்டம் நடத்தி டெல்லியில் கைதானேன்.

    ஆர்எஸ்எஸ் பின்னணியில் தமிழ்நாடு

    ஆர்எஸ்எஸ் பின்னணியில் தமிழ்நாடு

    சனாதன சக்தியை திணிக்க வேண்டும் என்றும், இந்துத்துவாவின் பிரதிநிதியாக ஆர்எஸ்எஸ் பின்னணியில் தமிழ்நாடுக்கு எவ்வளவு கேடுகள் செய்ய முடியுமோ அவ்வளவு கேடுகளையும் பிரதமர் மோடி செய்துவிட்டார். தற்போது செய்து கடைசியில் சமூக நீதிக்கும் கொள்ளி வைத்துவிட்டார்.

    மோடி மீது புகார்

    மோடி மீது புகார்

    எனவே, வாஜ்பாய் போல் நடப்பேன் என்று சொல்வது, மோடிக்கு வாஜ்பாயின் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட கிடையாது. மோடியை கார்ப்பரேட் கம்பெனிகளின் பிரதிநிதி என்று மக்கள் நினைக்கின்றனர் என்று மோடியிடம் நானே சொன்னேன்.

    வேளாண் மண்டலம்

    வேளாண் மண்டலம்

    மீத்தேன் எரிவாயு, நியூட்ரினோ, போன்றவை கொண்டு வந்ததோடு இயற்கை வேளாண் மண்டலமாக நாம் காப்பாற்ற சொல்கிறோம். ஆனால்.. அவர் பெட்ரோல் ரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவித்தது.

    டெல்டா இனி பாலைவனம்

    டெல்டா இனி பாலைவனம்

    அதற்கும் இந்த எடப்பாடி அரசு ஆதரவளித்து 1000 ஏக்கர் நிலங்களை ஒதுக்கியும் உள்ளது. இது ஒரு பெரிய திட்டம்.. இந்த காவிரி டெல்டாவை பாலைவனமாக மாற்றி விட்டால் எளித்தில் நிலத்தை வாங்கிவிடலாம் என்று வைகோ கூறினார்.

    English summary
    Prime minister Modi has been working for corporate businessmens welfare only, MDMK Chief Vaiko accussed in a press conference at Tirunelveli.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X