நெல்லை குவாரி மீட்பு.. கிரேனில் பாறையை தூக்கி பார்த்த அதிகாரிகள்.. அடியில் கண்ட காட்சி.. அதிர்ச்சி!
திருநெல்வேலி: நெல்லை குவாரி விபத்தில் சிக்கிய 6 பேரில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். நேற்று மீட்கப்பட்ட இன்னொருவர் மருத்துவமனையில் பலியானார். குவாரிக்குள் மேலும் 3 பேர் சிக்கி இருந்த நிலையில் தற்போது இறந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு உள்ளார்.
இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெல்லையில் ஏற்பட்ட குவாரி விபத்து தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. 48 மணி நேரமாக மீட்பு பணிகள் செய்தும் உள்ளே சிக்கி இருக்கும் 2 பேரை இன்னும் மீட்க முடியவில்லை.
திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை!
300 அடி ஆழத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த 6 பேர் இந்த விபத்தில் சிக்கினார்கள். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உள்ளே சிக்கி இருக்கும் 2 பேர் உயிருடன் இருப்பதே சந்தேகம்தான் என்று தீயணைப்பு துறையும் நம்பிக்கையின்றி தெரிவிக்க தொடங்கி உள்ளது.

என்ன நடந்தது?
இந்த நிலையில் குவாரியில் நேற்று மழை காரணமாக மாலைக்கு மேல் மீட்பு பணிகளை செய்ய முடியவில்லை. மழை முடிந்ததும் மீட்பு பணிகளை செய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் சிறு சிறு பாறைகள் உடைந்து கீழே விழ தொடங்கின. இதனால் அப்போதும் மீட்பு பணிகளை செய்ய போனது. பின் இரவு முழுக்க மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது. காலையில் மீண்டும் பணிகள் தொடங்கின.

உடல்
காலையில் மீட்பு பணிகள் தொடங்கிய போது கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்திற்கு வந்தனர். கிரேன் மூலம் பாறைகளை அகற்றினர். முதலில் சிறிய பாறைகளை அகற்றி அதன்பின் பெரிய பாறைகளை நீக்கினார்கள். பெரிய பாறைகளை நீக்குவதுதான் இதில் சிரமமான காரியமாக இருந்தது. இதனால் உள்ளே இருந்தவர்களை மீட்க நேரம் ஆனது.

மோசமான நிலை
இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் பெரிய பாறை ஒன்றை அதிகாரிகள் வெற்றிகரமாக தூக்கினார்கள். ஆனால் கீழே அவர்கள் கண்ட காட்சி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடலில் பாறை மோதி சிதிலம் அடைந்த நிலையில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் உடலில் எலும்புகள் உடைந்து மிக மோசமான நிலையில் சடலம் காணப்பட்டது. ஆனால் அவர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே செல்வம் என்ற ஊழியரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெயர் இல்லை
இப்போது கண்டுபிடிக்கப்பட்டவரின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அங்கு பெரிய பெரிய பாறைகள் இருப்பதால் உள்ளே சிக்கியவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்பட்டது. உள்ளே இருக்கும் மூவரும் பலியாகி இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். அதன்படியே தற்போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். உள்ளே இன்னும் இருவர் சிக்கி உள்ளனர். இவர்களை உயிரோடு மீட்க அதிகாரிகள் அங்கு போராடி வருகிறார்கள்.