விடமாட்டோம்.. பட்டென நெல்லை குவாரிக்கு விரைந்த அப்பாவு.. கஷ்டமா இருக்கு சார்.. போராடும் உயிர்கள்!
திருநெல்வேலி: நெல்லை கல் குவாரி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சபாநாயகர் அப்பாவு உடனே பதறியடித்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தார்.
நேற்று முதல்நாள் இரவு திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் அங்கு தனியார் கல்குவாரியில் விபத்து ஏற்பட்டது. 300 அடி ஆழத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த 6 பேர் இந்த விபத்தில் சிக்கினார்கள். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
210 சவரன் போலி நகைகள்... சென்னை வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி - 4 ஆண்டுக்கு பின் சிக்கிய பலே கும்பல்
கடும் மழை காரணமாக பாறைகள் திடீரென உடைந்து குவாரி உள்ளே விழுந்ததில் கொடூரமான விபத்து ஏற்பட்டது. இதுவரை 2 பேர் இங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பாவு
இந்த தகவல் அறிந்ததும் சபாநாயகர் அப்பாவு உடனே பதறியடித்து சம்பவ இடத்திற்கு விரைந்தார். அதேபோல் அமைச்சர் ராஜகண்ணப்பனும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். விபத்து ஏற்பட்டது எப்படி, பாறைகள் விழுந்தது எப்படி என்று ஆய்வு செய்தனர். அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த அதிகாரிகளிடம் அப்பாவு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

மீட்பு பணி
மீட்பு பணியில் அங்கு மழை காரணமாக தாமதம் ஏற்பட்டது. அதோடு மீட்பு பணிகளை செய்யும் போதே அங்கு பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுந்து வருகின்றன. இதனால் உள்ளே சிக்கி இருக்கும் மேலும் மூவரை மீட்பது சிரமம் ஆகியுள்ளது. மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள இந்த சிரமம் குறித்தும் அப்பாவு அங்கு இருந்த மீட்பு படையினரிடம் கேட்டறிந்தார். மழை பெய்யுது சார்.. பாறை இடையில் விழுது.. இதனால் மீட்பு பணி கஷ்டமா இருக்கு சார் என்று அப்பாவுவிடம் அதிகாரிகள் விளக்கினர். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு விரைந்தார்.

காயம்
அங்குதான் குவாரியில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட முருகன், விஜய் ஆகியோர் சிகிச்சை வருகின்றனர். இவர்களை நேரில் சந்தித்து அப்பாவு ஆறுதல் சொன்னார். அதோடு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர்களிடம் கவலைப்பட வேண்டாம். நீங்கள் விரைவில் குணம் அடைவீர்கள்.

அப்பாவு நெல்லை குவாரி
விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து நடக்க காரணமாக இருந்த யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கவலைப்பட வேண்டாம் என்று சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்தார். முழுமையான அனுமதி இன்றி குவாரி பணிகளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது வரை நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது முன்னிர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.