திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

300 அடி ஆழ நெல்லை குவாரி.. காப்பாத்துங்க சார்.. கையை நீட்டி உதவி கேட்ட ஊழியர்.. அடுத்து நடந்த சோகம்!

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: திருநெல்வேலியில் குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் மூவரை உயிருடன் மீட்பதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது.

Recommended Video

    Nellai Quarry விபத்து..300 அடி ஆழத்தில் நடந்த சோகம் | Oneindia Tamil

    நேற்று முதல்நாள் இரவு திருநெல்வேலி மாவட்டத்தில் லேசான மழை பெய்தது. அப்போதுதான் திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் விபத்து ஏற்பட்டது.

    அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன

    முறையாக விதிகளை பின்பற்றாமல் இங்கு குவாரி பணிகள் நடந்து வந்துள்ளன. இந்த நிலையில்தான் அங்கு இரவு 11.30 மணி அளவில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.

    பாறைகள் சரிந்து விபத்து

    பாறைகள் சரிந்து விபத்து

    மேலே இருக்கும் பாறைகள் உடைந்து அப்படியே குவாரி உள்ளே விழுந்துள்ளது. மழை காரணமாக இந்த பாறைகள் உடைந்து விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மழை காரணமாக ஏராளமான ஊழியர்கள் மேலே வந்துவிட்டனர். ஆனால் 6 ஊழியர்கள் மட்டும் கீழே இருந்த லோடு லாரி மற்றும் கிட்டாச்சி வாகனங்களில் தங்கி இருந்தனர். இவர்கள் கீழே சிக்கி உள்ளனர்.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    இந்த நிலையில் மழை கொஞ்சம் தீவிரம் எடுத்ததும், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் இருந்த கிட்டாச்சிக்கு மேலே பாறைகள் விழுந்துள்ளன. அடுத்த சில நொடிகளில் லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், ஆகியோர் இருந்த லாரி மீது பெரிய பாறைகள் விழுந்துள்ளன. பெரிய பெரிய பாறைகள் அப்படியே லாரி மீது பொத்தென விழுந்துள்ளன. இதையடுத்து மேலே இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மீட்பு பணி

    மீட்பு பணி

    இவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு உடனே வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை தொடங்கினர். தூத்துக்குடி, நெல்லையில் இருந்து கொண்டு வரப்பட்ட ராட்சச கிரேன்கள் உதவியுடன் இரண்டு ஊழியர்கள் மீட்கப்பட்டனர். மீதம் உள்ள ஊழியர்களை மீட்க நேற்று கடும் போராட்டம் நடைபெற்றது. தற்போது குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் மூவரை உயிருடன் மீட்பதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது.

    செல்வம்

    செல்வம்

    நேற்று மீட்பு பனியின் போது பாறைகளுக்கு அடியில் சிக்கி இருந்த கிட்டாச்சி ஆபரேட்டர் செல்வம்.. மீட்பு பணியாளர்களை பார்த்ததும் கையை நீட்டி தனக்கு உதவும் படி கூறினார். ஆனால் இவருக்கு மேலே கிட்டாச்சி வாகன பாகங்கள் இருந்தன. அதற்கும் மேலே பெரிய பெரிய பாறைகள் இருந்தன. இந்த பாறைகளை கஷ்டப்பட்டு கிரேன் மூலம் நீக்கப்பட்டன. அப்போது கையை நீட்டிய செல்வம்.. சார் எப்படியாவது என்னை காப்பாத்துங்க என்று கூறினார்.

    மரணம்

    மரணம்

    இவரை பல மணி நேர் போராட்டத்திற்கு பின் மீட்டனர். ஆனால் நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டவர், அவசர சிகிச்சை கொடுத்தும் பலனின்றி பலியானார். இதுவரை 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர் பாறைகளுக்கு கீழே சிக்கி இருக்கும் மேலும் 3 பேரின் நிலை தெரியவில்லை. கடுமையான காயங்கள் காரணமாக இவர்கள் பலியாகிவிட்டதாக அஞ்சுவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Quarry accident in Thirunelveli: What is happening in the risky Rescue operation under 300 ft? திருநெல்வேலியில் குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் மூவரை உயிருடன் மீட்பதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X