திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்வி எப்படி இருக்க வேண்டும்.. திருநெல்வேலியில் பேராசிரியர்களுடன் கலகலப்பாக பேசிய ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: கல்வி முறைக்கான கொள்கையை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் பேசி உருவாக்க வேண்டும் என்று திருநெல்வேலியில் செயின்ட் சேவியர் கல்லூரி பேராசிரியர்களுடன் கலந்துரையாடும் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மீண்டும் தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு

இந்தியாவின் எதிர்காலம்

இந்தியாவின் எதிர்காலம்

'வாங்க ஒரு கை பார்ப்போம்' என்ற தலைப்பில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நேற்று ராகுல்காந்தி பேசுகையில், இந்தியா எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை தமிழகம்தான் நிர்ணயிக்க போகிறது. இது எனது உணர்வு. இதற்கு காரணம் தெரியவில்லை.

சிறுகுறு தொழில்கள்

சிறுகுறு தொழில்கள்

தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்ட முடியும், தமிழர்கள் வழிகாட்டுவார்கள். இதற்குக் காரணங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழிலாளர்கள் உள்ளனர். சீனாவின் மிரட்டலையும் நாட்டின் பொருளாதார படையெடுப்பையும் எதிர்கொள்ள சிறு, குறு தொழில்களால்தான் முடியும். கையிலுள்ள தொலைபேசி, சட்டை, செருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கிறது.

திறமையான இளைஞர்கள்

திறமையான இளைஞர்கள்

ஆனால் நம்மிடம் ஆர்வமுள்ள திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நல்ல சக்தி, கனவு இருந்தாலும், நம்மிடம் வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டத்தைப் பார்க்க முடிகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது.

ராகுல் குற்றச்சாட்டு

ராகுல் குற்றச்சாட்டு

தமிழக அரசு ஒழுங்காக செயல்பட்டால் எந்தப் பொருட்களும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதைப்பார்க்க முடியும். அப்போது தமிழக தெருக்களில் வேலையில்லா இளைஞர்களை பார்க்க முடியாது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை அந்த பொருட்களின் மீது போடமுடியவில்லை என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதனிடையே இன்று திருநெல்வேலியில் செயின்ட் சேவியர் கல்லூரி பேராசிரியர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், கல்வி முறைக்கான கொள்கையை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் பேசி உருவாக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக கல்வி கொள்கை அப்படி நமது நாட்டில் புதிய கொள்கை உருவாக்கப்படவில்லை. கல்வி என்பது பணம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று இருப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன். நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு வரும்போது, கல்வியில் உதவித்தொகை மாணவர்களுக்கு தரப்படும் என்றார்.

English summary
If we are going to have any policy made for the education system, then, it has to come from a conversation with students & professors. Unfortunately, this was not done: Rahul Gandhi, Congress interacts with college professors at St. Xavier’s College in Tirunelveli, Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X