திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது.. ஒரு சிப் அடித்துவிட்டு கடைக்காரரை பாராட்டிய ராகுல் காந்தி!

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது.. ஒரு சிப் அடித்துவிட்டு கடைக்காரரை பாராட்டிய ராகுல் காந்தி!

    தேர்தல் பிரச்சாரத்திற்காக 3 நாட்கள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் அவ்வப்போது தமிழகம் வருகிறார்.

    வந்தவர், மக்களுடன் சகஜமாக பழகுகிறார். தான் எல்லோராலும் எளிதில் அணுகக் கூடியவர் என்பதை மக்களுக்கு நிரூபிக்கிறார். அந்த வகையில் இந்த முறை தமிழகம் வந்த அவர் தென்காசி, நெல்லை பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

    தேநீரை ருசித்த ராகுல்

    தேநீரை ருசித்த ராகுல்

    அப்போது அடைக்கலப்பட்டினத்தில் அமைந்துள்ள தேநீர் கடையில் வண்டியை நிறுத்தி தேநீரை ருசித்து விட்டு சென்றார். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேநீரை குடித்தபடி சுற்றியுள்ள மக்களிடம் பேசிய ராகுல் காந்தி, டீ போட்டு கொடுத்த மாஸ்டரின் தோளில் கையை போட்டுக் கொண்டு தமிழகத்தில் ரொம்ப நல்ல டீ இது என தமிழில் பேசி ஆச்சரியமூட்டினார்.

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    அத்துடன் அவரது பெயரையும் கேட்டறிந்த ராகுல் காந்தி, முருகேன் நன்றி வணக்கம் என சொல்லி விடைபெற்றார். அதோடு அங்கு கூடியிருந்த மக்களிடத்திலும் கை குலுக்கியபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். வழியில் நுங்கு, இளநீர் உள்ளிட்டவற்றை ருசித்து பார்த்து சுவை நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

    கலக்கல் நடனம்

    கலக்கல் நடனம்

    நெல்லையில் பள்ளி மாணவிகளுடன் கலக்கல் நடனம் ஆடினார். இவருடன் தினேஷ் குண்டுராவும், கே எஸ் அழகிரியும் உற்சாகமாக நடனமாடினர். பெரும்பாலான மக்களை அழைத்து பேசி அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார் ராகுல். ஒரு கல்லூரியில் மாணவியுடன் தண்டால் எடுத்தார்.

    பாசம்

    பாசம்

    மிகவும் வேகமாக தண்டால் எடுத்த ராகுல் ஒரு கையால் தண்டால் எடுக்க முடியுமா என அந்த மாணவியிடம் சவால் விடுத்தார். நேற்றைய தினம் கன்னியாகுமரி கடலில் குளித்தார். இவ்வாறு தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் ராகுல் காந்தி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்கிறார். இதனால் அவர் மீது தமிழக மக்கள் பாசத்தை கொட்டுகிறார்கள்.

    English summary
    Congress EX President Rahul Gandhi praises Tea shop keeper for making good tea
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X