திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாருக்கும் கீழ் இருந்து ரஜினியால் பணியாற்ற முடியாது.. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி-வீடியோ

    நெல்லை: நடிகர் ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியுடனும் சேரமாட்டார் என்றும் கட்சி ஆரம்பித்தாலும் தனியாகத்தான் நிற்பார் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் எம்பி கூறினார்.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது.

    ஆனால் இதுவரை அவர் கட்சி ஆரம்பிக்கும் பணிகளில் ஈடுபடவில்லை. அதேநேரம் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    லலிதா ஜுவல்லரி கொள்ளை.. அன்று இரவு மழை பெய்தது.. அதுதான் எங்களுக்கு சாதகமானது.. பரபர வாக்குமூலம்!லலிதா ஜுவல்லரி கொள்ளை.. அன்று இரவு மழை பெய்தது.. அதுதான் எங்களுக்கு சாதகமானது.. பரபர வாக்குமூலம்!

    தர்பாரும் வரப்போகுது

    தர்பாரும் வரப்போகுது

    இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரஜினி நடிப்பில் எந்திரன் 2, கபாலி, காலா, பேட்ட என நான்கு படங்கள் வெளியாகி விட்டது. இப்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

    கட்சி ஆரம்பிப்பார்

    கட்சி ஆரம்பிப்பார்

    இந்நிலையில் சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 16 மாதங்களே உள்ளதால் ரஜினி விரைவில் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று பலரும் பேசி வருகிறார்கள். அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பார் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.

    ரஜினியால் பணியாற்ற முடியாது

    ரஜினியால் பணியாற்ற முடியாது

    இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியின் நெருங்கிய நண்பரும் காங்கிரஸ் கட்சி எம்பியுமான திருநாவுக்கரசர், "நடிகர் ரஜினிகாந்த் அதிமுக, பாஜக, காங்கிரஸ், திமுக என எந்த கட்சியுடனும் சேர மாட்டார். யாருக்கும் கீழ் இருந்து அவரால் பணியாற்ற முடியாது.

    ஸ்டாலின் முதல்வர்

    ஸ்டாலின் முதல்வர்

    நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் தனியாகத்தான் நிற்பார். அவர் யாருடனும் கூட்டணி சேருவாரா இல்லையா என்பதை ரஜினி தான் சொல்ல வேண்டும். நான் சொல்ல முடியாது. அதேநேரம் எந்த நடிகர் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும். ஸ்டாலின் முதல்வர் ஆவார். இது எங்களுடைய அழுத்தமான நம்பிக்கை" இவ்வாறு கூறினார்.

    English summary
    Thirunavukkarasar mp said, Rajini cannot work under anybody. if rajini launch party he will not alliance with any party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X