India
 • search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லை கல்குவாரி விபத்து..! பாறைக்கடியில் வந்த துர்நாற்றம்! 6வது நபரின் நிலை என்ன? பரபர பின்னணி..!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், 6வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் குவியலுக்குள் சிக்கி இருக்கும் 6வது நபரை மீட்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து உடலை மீட்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  நெல்லை கல் குவாரி விபத்து..! பாறைக்கடியில் வந்த துர்நாற்றம்

  நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடை மிதிப்பான் குளத்தில் கல் குவாரியில் நேற்று முன்தினம் இரவு 400 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கினர்.

  3 பிளான் + 2 குறி.. ஸ்டாலின் கணக்கு நொறுங்குகிறதா.. திமுகவை டேமேஜ் செய்ய போகும் எடப்பாடி.. பாஜக குஷி3 பிளான் + 2 குறி.. ஸ்டாலின் கணக்கு நொறுங்குகிறதா.. திமுகவை டேமேஜ் செய்ய போகும் எடப்பாடி.. பாஜக குஷி

  மேலும் அங்கு நின்ற லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்களும் இடிபாடுகளில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் குவாரிக்குள் இயங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

  கல்குவாரி விபத்து

  கல்குவாரி விபத்து

  அப்போது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் , நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சுமார் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  பேரிடர் மீட்புக்குழு

  பேரிடர் மீட்புக்குழு

  இதற்கிடையே பாறை சரிவில் சிக்கிய காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் , தச்சநல்லூர் ஊருடையான்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் ஆகிய மேலும் 3 பேர் கதி என்ன? என்று தெரியாத நிலையில், சுமார் 400 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை மூவர் உயிர் இழந்த நிலையிலும் இருவர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர்

  பாறைகள் தகர்ப்பு

  பாறைகள் தகர்ப்பு

  இந்நிலையில் ஆறாவது நபரான ஓட்டுனர் ராஜேந்திரனை மீட்கும் பணி நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அவர் உடல் இருக்கும் பகுதியை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. துர்நாற்றம் வீசும் இடங்களில் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பாறைக்கு அடியில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்தப் பாறையை வெடிவைத்து தகர்த்து உடலை மீட்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

  மக்களுக்கு எச்சரிக்கை

  மக்களுக்கு எச்சரிக்கை

  இதனை அடுத்து பாறையில் 30க்கு மேற்பட்ட இடங்களில் துவாரங்கள் போடப்பட்டு அதில் வெடி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோவிற்கும் அதிகமான வெடி மருந்து பாறையில் வைக்கப்பட்டு தகர்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாறைகளை அகற்றி விட்டு உடலை மீட்கும் பணி நடைபெறும் பாறை வெடிவைத்து தகர்க்கப்பட இருப்பதால் குவாரியின் 500 மீட்டர் சுற்றளவிற்குள் யாரும் நுழைய கூடாது என காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் குவாரி அதிபர் செல்வராஜின் திசையன்விளை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் வீட்டிற்குள் மிளகாய் பொடிகள் தூவப்பட்டுள்ளது குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  English summary
  Rescue operations are continuing for the 6th day following the Nellai quarry accident. It has been reported that the rescue operation for the body of the 6th person trapped in the pile has been started as the rescue operation has begun.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X