திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏற்கனவே திருடின வீடு.. இங்க ஒன்னும் தேறாது.. கொள்ளையர்களின் பிரெஞ்ச் குறியீடு.. பதட்டத்தில் நெல்லை!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வீடுகளின் கேட்களில் வயதானவர்கள் உள்ள வீடு, இங்கு ஒன்னும் தேறாது, நல்ல பணக்கார வீடு என்பதை குறிக்கும் பிரெஞ்ச் மொழியிலான குறியீடுகளால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

தீரன் படத்தில் வருவது போன்று கொடூர கொள்ளை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. துடைப்பம் விற்பது, பஞ்சு மிட்டாய் விற்பது உள்ளிட்ட ஏதேனும் விற்பனை செய்வது போல் பல ஏரியாக்களில் சென்று நோட்டமிட்டு பின்னர் திருடும் செயலை செய்து வருகிறார்கள்.

யார் அந்த கருப்பு ஆடு.. திமுக குறித்த யார் அந்த கருப்பு ஆடு.. திமுக குறித்த "அந்த" தகவல்.. ரஜினி காதுக்கு போயிருக்காமே... பரபரக்கும் களம்!

வீடுகள் நோட்டம்

வீடுகள் நோட்டம்

இதிலும் தற்போது டீம் வொர்க் முறை அமலாகியுள்ளது. அதாவது வீடுகளை நோட்டமிட ஒரு குழுவினர் பயன்படுத்தப்படுவர். அவர்கள்தான் வியாபாரிகள், யாசகம் கேட்பது போல் சென்று வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதை நோட்டமிடுகிறார்கள். அவர்கள் இன்னொரு டீமுக்கு தகவல்களை கொடுக்கிறார்கள்.

சம்பவங்கள்

சம்பவங்கள்

அந்த குழுவினர் இரவு நேரங்களில் கொள்ளையை அரங்கேற்றுகிறார்கள். கிடைப்பதில் ஒட்டுமொத்தமாக பங்கு போட்டு கொள்கிறார்கள். ஒரே நேரத்தில் குழுக்களாக சென்று பல வீடுகளில் திருடுகிறார்கள். வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். தற்போது கொரோனா காலத்தில் வேலையின்றி, பணமின்றி மக்கள் தவித்து வருவதால் இந்த குற்றச் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன.

அண்மைக்காலம்

அண்மைக்காலம்

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வி எம் சத்திரம் மற்றும் ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீடுகள்தோறும் கேட்டுகளில் ஏதோ குறியீடுகள் இருந்ததை மக்கள் கவனித்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விசாரணையில் இந்த குறியீடுகள் பிரெஞ்ச் மொழி குறியீடூகள் என தெரியவந்தது. அதில் மொத்தம் 8 குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. dimanche matron அதாவது ஞாயிறு அதிகாலை k for cash என்ற வார்த்தைகளின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடுவதற்கு திட்டம் என குறியீடுகள் வரையப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த குறியீடுகள் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையப்பட்டுள்ளன.

திருடியதுதான்

திருடியதுதான்

இந்த நிலையில் நெல்லையில் அண்மைக்காலமாக வீடுகள்தோறும் கேட்டுகளில் ஏதோ குறியீடுகள் இருந்ததை மக்கள் கவனித்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விசாரணையில் இந்த குறியீடுகள் பிரெஞ்ச் மொழி குறியீடுகள் என தெரியவந்தது. அதில் மொத்தம் 8 குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

English summary
Robberers in Nellai did a symbol which is in French language which says about the security of the house, is the house suitable for robbery? etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X