திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது பகீர் புகார்.. டிஐஜி வரை சென்ற மோசடி புகார்.. நெல்லையில் பரபரப்பு..!

அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது மோசடி புகார் கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

நெல்லை: அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது ஒரு மோசடி புகார் எழுந்துள்ளது.. அவசரத்துக்கு காசு வாங்கினாராம்... ஆனால், அதை திருப்பி தரவில்லையாம்.. 40 லட்சம் ரூபாய் கேட்டு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் டிஐஜியிடம் புகார் தந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் டிவி மணி... இவர் பேரூராட்சி செயல் அலுவலராக வேலை பார்த்தவர்.. இப்போது ரியர்ட் ஆகிவிட்டார்..

Rs 40 Lakh cheating complaint on ADMK Nellai MLA Inbathurai

இவர் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினியிடம் ஒரு புகார் தந்துள்ளார். அந்த புகாரில் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரையும் நானும் நீண்ட காலமாக நண்பர்கள்.. அந்த அடிப்படையில் 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22ம் தேதி இன்பதுரை என்னிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் கடனாக கேட்டார். அந்த பணத்தை இன்பதுரையின், சென்னை உயர்நீதிமன்ற இந்தியன் வங்கிக் கிளை கணக்கில், என்னுடைய மகன் வங்கி கணக்கு மூலம் செலுத்தினேன்.

ஆனால், பணத்தை திருப்பிக் கேட்டபோது இன்பதுரை தரவில்லை.. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.. இதை பற்றி அறிந்து கொண்ட அவர், தொலைபேசி மூலமாகவும் அவரது ஆட்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நெல்லை சரக டிஐஜியிடம் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி அதிமுக எம்எல்ஏ மீது பகீர் புகார் கிளம்பி உள்ளது பெரும் பரபரப்பை கட்சி வட்டாரத்தில் ஏற்படுத்தி வருகிறது.. இதன் உண்மைதன்மையை போலீசார்தான் வெளிக்கொணர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடி உள்ளது.

English summary
Rs 40 Lakh cheating complaint on ADMK Nellai MLA Inbathurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X