திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மலைவாழ் மக்களுடன் காவல்துறையினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

Google Oneindia Tamil News

நெல்லை: சமத்துவ பொங்கல் விழா - மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

syn: காவல் துறையினரும் சமூக அமைப்புகளும் இணைந்து மலைவாழ் பழங்குடியின மக்களோடு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

Samathuva pongal celebration Tribes people

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பா நதி அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்களுடன் இணைந்து காவல்துறையினரும் சமூக அமைப்பினரும் இணைந்து சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பாநதி நீர்த்தேக்கம் அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் 42 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் குடியிருந்த பளிகர் இன மலைவாழ் மக்கள் கடந்த 2001ஆம் ஆண்டு கருப்பாநதி நீர்த்தேக்கம் அருகே குடியமர்த்தபட்டனர்.

Samathuva pongal celebration Tribes people

இவர்கள் மலையில் உள்ள தேன், காட்டு நெல்லி போன்றவற்றை பறித்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடுவதில்லை. இவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த 2 வருடங்களாக சமூக அமைப்புகளும், புளியங்குடி காவல் துறையினரும் இணைந்து பல்வேறு உதவிகள் செய்து அவர்களோடு பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

Samathuva pongal celebration Tribes people

இந்த வருடம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக மும்மதத்தினரும் இணைந்து, புளியங்குடி காவல் துறை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த வருடம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக மும்மதத்தினரும் இணைந்து மலைவாழ் மக்களோடு பொங்கலிட்டு கொண்டாடினர். முடிவில் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

English summary
Pongal was celebrated on January 15th in all over TamilNadu. Tirunelveli district Puliangudi Inspector Aadivel ganesh celebrates samathuva pongal with tribes people near Karupa nathi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X