திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனியம்மாள் சொன்ன 2 பேர் யார்.. நெல்லை திமுகவில் பெரும் கலக்கம்.. சூடுபிடிக்கும் உமா மகேஸ்வரி வழக்கு

நெல்லை திமுகவில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியல் காழ்ப்புணர்ச்சியலேயே விசாரணை..! திமுக பிரமுகர் சீனியம்மாள் குற்றச்சாட்டு

    நெல்லை: உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் நெல்லை திமுக பிரமுகர்கள் ஒருசிலருக்கு வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டுள்ளது போல இருக்கிறதாம்!

    நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை அவர் உடனடியாக மறுத்ததுடன், உண்மை குற்றவாளி தப்பிவிடகூடாது என்று சொல்லி இருந்தார்.

    இந்நிலையில், வழக்கில் அதிரடி திருப்பமாக சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் 3 பேரையும் கொன்றது தான் தான் என்று சொல்லி இருந்தார்.

    கொலை

    கொலை

    உமா மகேஸ்வரி உடனான அரசியல் விரோதம் சீனியம்மாளுக்கு கிட்டத்தட்ட 23 வருஷங்களாக வளர்ந்து கொண்டே இருந்து கடைசியில் அது கொலையில் முடிந்துள்ளது. உடனே சீனியம்மாள் இதை பற்றி பேட்டி தந்தார்.

    2 பேர்

    2 பேர்

    அதில், "இது எல்லாத்துக்கும் காரணம் நெல்லையை சேர்ந்த திமுக முக்கிய நிர்வாகிகள் அந்த 2 பேர்தான். அவங்களுடைய தூண்டுதலில்தான் இவ்வளவு பிரச்சனையும் எங்களுக்கு வந்திருக்கிறது. திரும்பவும் சொல்றேன்.. எனக்கும் உமா மகேசுவரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிபிசிஐடி போலீசாவது இதை நேர்மையாக விசாரிக்கணும்" என்றார்.

    கலக்கம்

    கலக்கம்

    சீனியம்மாள் பெயர் குறிப்பிட்டே அந்த இருவரையும் சொல்லியுள்ளார். அந்த இருவருமே நெல்லை மாவட்ட திமுகவில் மிக முக முக்கியப் பிரமுகர்கள். இதனால் நெல்லை மாவட்ட திமுகவில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்டோர் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். யார் யார் சிக்கப் போகிறார்களோ என்ற கலக்கமும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

    அவப்பெயர்

    அவப்பெயர்

    இந்த விவகாரம் திமுகவுக்கு எந்த வகையில் பாதிப்பு வரும் என்று தெரியவில்லை. ஆனால் பெரிய தலைகள் யாராவது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டால் அது நிச்சயம் நெல்லை மாவட்டத்தில் திமுகவுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அது திமுகவுக்கு பாதகமாக போகக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.

    சிபிசிஐடி

    சிபிசிஐடி

    ஆக, இந்த கொலை விவகாரம் பெரிய தலைவலியாக திமுகவுக்கு உருவாகும் போல தெரிகிறது. அதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், கார்த்திகேயனை தங்களது ஆதாயத்துக்காக திமுகவை சேர்ந்த ஒரு சிலர் பயன்படுத்திக் கொண்டார்களா என்பது பற்றியும் சிபிசிஐடி விசாரணையை துவங்கி உள்ளது.

    விறுவிறுப்பு

    விறுவிறுப்பு

    கார்த்திகேயன் கொலை நடந்த அன்று செல்போனில் யாருடன் பேசினார் என்றும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். முழு விசாரணையும் விறுவிறுப்படையும் பட்சத்திலும், கார்த்திகேயன் முழுமையாக பேசும் பட்சத்திலும்தான் இந்த கொலை வழக்கின் போக்கை ஊகிக்க முடியும்.

    English summary
    It is said that Thirunelveli DMK executives are vy upset due to Uma Maheswari murder case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X