திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபனி புயல் வருவதற்கு முன்பே சூறைக்காற்று.. நெல்லை, விருதுநகரில் கனமழை.. மரங்கள் விழுந்தது!

Google Oneindia Tamil News

Recommended Video

    Fani Cyclone | தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ

    திருநெல்வேலி: நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இன்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இன்று இரவும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேரம் செல்ல செல்ல வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் 36 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கு ஃபனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புயலுக்கு முன்பே தமிழகத்தில் கனமழை பெய்ய தொடங்கிவிட்டது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது.

    சென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா?.. இந்த வீடியோவைப் பாருங்கள் சென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா?.. இந்த வீடியோவைப் பாருங்கள்

    தென்மாவட்டங்களில் எப்படி

    தென்மாவட்டங்களில் எப்படி

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரையில் சில இடங்கள் என்று மழை காலையில் இருந்து கொட்டி தீர்த்தது. அதேபோல் கன்னியாகுமரியில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    சூறாவளி இருக்கிறது

    சூறாவளி இருக்கிறது

    நெல்லையில் மழையோடு சேர்த்து சூறாவளி காற்றும் வீசியது. அதேபோல் விருதுநகரில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. நெல்லையில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில் களக்காடு, சிதம்பரபுரம், சிவபுரம், மூங்கிலடி பகுதிகளில் மிக மிக கடுமையான மழை பெய்தது.

    தென்னை விழுந்தது

    தென்னை விழுந்தது

    இங்கு இருந்து தென்னை மற்றும் வாழை மரங்கள் பல மழையில் முறிந்து விழுந்தது. அதேபோல் விருதுநகரில் சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்தது. தற்போது இந்த பகுதிகளில் மின்சாரம் மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    ஃபனி புயல் எப்படி

    ஃபனி புயல் எப்படி

    இன்னும் ஃபனி புயல் முழுமையாக உருவாகவில்லை. ஆனால் அதற்குள் தமிழகத்தில் மழை தீவிரமாக பெய்ய தொடங்கி உள்ளது. சூறாவளியும் அடித்து வருகிறது. ஃபனி வந்த பின் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்று கேள்விகள் எழுந்துள்ளது.

    English summary
    Southern Districts including Nellai has seen a huge rainfall with storm today in TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X