திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும்.. வரவேற்காவிட்டால்தான் ஆச்சரியம்.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    சங்கரன்கோவிலில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம்- வீடியோ

    சங்கரன்கோவில்: பாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

    சங்கரன்கோவிலில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் தென்காசி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில் நாட்டில் தூய்மையான ஆட்சி நடைபெறவில்லை. மோடி தலைமையில் ஊழல் ஆட்சிதான் நடைபெறுகிறது.

    நதிகள் இணைப்பு சாத்தியம் அல்ல.. கே.எஸ் அழகிரி கருத்து நதிகள் இணைப்பு சாத்தியம் அல்ல.. கே.எஸ் அழகிரி கருத்து

    புரியும்

    புரியும்

    பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நடிகர் ரஜினிகாந்துக்கு மட்டும்தான் புரியும். பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரிக்காதிருந்தால்தான் ஆச்சரியம்.

    அப்பல்லோ

    அப்பல்லோ

    கருணாநிதி மரணத்தில் கூட அவரை சித்ரவதை செய்தவர்கள் அதிமுகவினர். கருணாநிதி மருத்துவமனையில் இருந்த போது தினமும் செய்திகள் வந்ததா இல்லையா. ஆனால் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது என்ன நடந்தது.

    ஏழைகளுக்காக...

    ஏழைகளுக்காக...

    பெட்ரோல், சிலிண்டர் விலையை உயர்த்திய மோடியா ஏழை தாயின் மகன்? அவர் எப்போது ஏழைகளுக்காக பாடுப்பட்டுள்ளார் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாஜக தேர்தல் அறிக்கை

    பாஜக தேர்தல் அறிக்கை

    பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என்ற வாக்குறுதியை ரஜினி வரவேற்பதாக தெரிவித்தார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் நதிகளை இணைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK President MK Stalin criticises that Rajinikanth only understands BJP election manifesto.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X