திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிங்கம் சிங்கிளாதான் வரும், அப்ப சிவாஜிதானே பெஸ்ட்டு.. இந்தக் காலத்துப் பசங்க பயங்கரமா இருக்காங்களே!

Google Oneindia Tamil News

நெல்லை: சிவாஜி, அலெக்சாண்டர் இருவரில் உலகின் தலைச்சிறந்த வீரர் யார்- விரிவாக எழுதுக என்ற கேள்விக்கு 7-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் எழுதியுள்ள விடை வைரலாகி வருகிறது.

பொதுவாக பள்ளிகளில் மாணவர்கள் செய்யும் காமெடி சில நேரங்களில் வாத்தியார்களையே சிரிக்க வைத்துவிடும். அதிலும் அவர்களின் வினாத்தாள்களை திருத்தும் போது குடும்ப கஷ்டங்கள் மறந்து போகும் அளவுக்கு ஆசிரியர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்.

90-களில் பொதுவாக பாடப்பகுதிகளை தாண்டி கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்காமல் இருந்து வந்தோம். ஆனால் அதிலும் சோப்புகளின் வகைகள் என்ன என்ற கேள்விக்கு மட்டும் அது அவுட் ஆப் சிலபஸ்ஸாக இருந்தாலும் ஹமாம், லக்ஸ், சின்தால், ரெக்சோனா, விஜில் என எழுதியதை மறக்க இயலாது. அதிலும் இன்னும் சில மாணவர்கள் துணி சோப்புகளான பொன்வண்டு, ரின் உள்ளிட்டவைகளையும் மறக்காமல் எழுதியதுண்டு. அது ஒரு அழகிய கனாக்காலம் என்றே சொல்லலாம்.

வானவில்லே வானவில்லே.. அழகாக உடைந்து அருமையாக வண்ணம் தரும் ஐஸ் பாறைகள்! வானவில்லே வானவில்லே.. அழகாக உடைந்து அருமையாக வண்ணம் தரும் ஐஸ் பாறைகள்!

விரிவாக எழுதுக

விரிவாக எழுதுக

நாம் தவறாக எழுதினாலும் கையெழுத்து முத்து முத்தாக இருந்தால் படிக்காமல் மதிப்பெண் கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை மேலோங்கி இருக்கிறது. அதற்காக சம்பந்த சம்பந்தமில்லாதவற்றை எழுதுவது வாடிக்கை. அந்த வகையில் களியக்காவிளை அரசு பள்ளியில் மாணவர் ஒருவரிடம் சிவாஜி, அலெக்சாண்டர் இருவரில் உலகின் தலைச் சிறந்த வீரர் யார் - விரிவாக எழுதுக என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிகவும் அழகாக முத்து முத்தாக அச்சு அசலாக பதில் எழுதியுள்ளார். இதையடுத்து ஆசையாக படித்து பார்த்த ஆசிரியர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அந்த மாணவன் எழுதிய பதில் இதுதான்:

கூட்டமா வரும்

கூட்டமா வரும்

நிச்சயமாக "சிவாஜி"தான் ஏனென்றால் அவர்தான் "கண்ணா பண்ணிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும்" என்று பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டே ஒரே நேரத்தில் 100 பேரை அடித்து வீழ்த்தியவர். ஆனால் அலெக்சாண்டர் தாவி சுவரில் மிதித்து காலை சுழற்றி அடித்தாலும் பத்து பேரை மட்டுமே அடித்து வீழ்த்தியுள்ளார். ஆகவே உலகின் தலைசிறந்த வீரர் "சிவாஜி"தான்.

குருவி படம்

குருவி படம்

பானிபட் போர் எதற்காக நிகழ்ந்தது குறிப்பு வரைக என்ற கேள்விக்கு மாணவன் எழுதிய பதில்- வடநாட்டில் பானிபூரி எனப்படும் ஒரு வகை உணவிற்காகவும் பாணி எனப்படும் தண்ணீருக்காகவும்தான் பானிபட் போர் ஆரம்பித்ததாக சொல்லப்படுபகிறது. நான் இன்னும் பானிபூரி சாப்பிட்டதில்லை என்பதால் குறிப்பு எல்லாம் வரைய முடியாது. வேண்டுமெனில் ஒரு குருவி படம் வரையலாம் என்று பதில் எழுதியிருந்தார்.

வைரல்

வைரல்

இதை பார்த்த ஆசிரியருக்கு மாணவனை திட்டுவதாக இல்லை கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும் சமாளிக்க தெரிந்த சமயோஜிதத்தை பாராட்டுவதா என தெரியவில்லை. எனினும் இந்த விடைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

English summary
Student of Class 7 writes history related questions. Its becomes viral in social medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X