திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது: சு.சுவாமி அட்டாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜி.எஸ்.டி வரியை குறைக்க சிறு, குறுந்தொழில் நிறுவன சங்கம் வலியுறுத்தல்...

    திருநெல்வேலி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது என பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பகிரங்கமாக விமர்சித்திருக்கிறார்.

    பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அமைச்சரவையிலும் தற்போதைய அமைச்சரவையிலும் நிதி அமைச்சராக வேண்டும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் நிறைவேறாத கனவு. இதனாலேயே நிதி அமைச்சராக யார் பதவி வகித்தாலும் விமர்சித்துக் கொண்டே இருப்பார் சுப்பிரமணியன் சுவாமி.

    Subramanian swamy slams Nirmala Sitharaman

    இம்முறையும் மோடி அரசில் எப்படியும் நிதி அமைச்சராவோம் என மிகவும் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் நிர்மலா சீதாராமனுக்கு நிதி அமைச்சர் பதவி கிடைத்தது.

    அதனால் அவரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அதுவும் தற்போது பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள சூழலை பயன்படுத்தி நிர்மலா சீதாராமனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.

    உலகத்திலேயே இல்லாத கொடுமை.. 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. சக மாணவன் மீது புகார்!உலகத்திலேயே இல்லாத கொடுமை.. 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. சக மாணவன் மீது புகார்!

    இந்நிலையில் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

    முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது மொத்தம் 7 வழக்குகள் உள்ளன. அவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.

    ப.சிதம்பரத்தைப் போல சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் கைதாக உள்ளனர். அனேகமாக திகார் சிறையில்தன் காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டிக் கூட்டத்தை நடத்த வேண்டியிருக்கும்.

    அன்று காங்கிரஸ் செய்த ஊழல்களே பொருளாதார மந்த நிலைக்கு காரணம். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது.

    தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் பற்றி தெரியாது. பாஜக அரசில் பொருளாதார மேதைகள் நிதி அமைச்சர்களாக இருந்தது இல்லை.

    இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

    English summary
    BJP Rajyasabha MP Subramanian Swamy slammed Union Finance Minister Nirmala Sitharaman on Economy issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X