திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.. நெல்லையில் காலமானார்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார்.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார்.

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமான எழுத்தாளர். இவருக்கு என்று தனி வாசகர் கூட்டம் இருக்கிறது. தென் தமிழகத்தின் வாழ்வியலை புனையக்கூடியதில் வல்லவர், தோப்பில் முகமது மீரான்.

Tamil and Malayalam writer Thoppil Mohamed Meeran dies at 74

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம்தான் இவரது பூர்வீகம். தமிழில் எழுதுவது மட்டுமில்லாமல் மலையாளத்தில் எழுதுவதிலும் இவர் கைதேர்ந்தவர். 1944ல் பிறந்த இவர் தனது பதின்ம வயதுகளில் இருந்தே புதினங்களை எழுதி வருகிறார்.

தமிழ், மலையாளம் இரண்டிலும் இவர் புதினங்களை எழுதி இருக்கிறார். தோப்பில் முகமது மீரான் தனது எழுத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாய்வு நாற்காலி நாவலுக்காக 1997ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக எழுதாமல் இருந்தார். கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு மாறி கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இவருக்கு தற்போது 74 வயதாகிறது. இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை நெல்லை பேட்டையில் நடக்கிறது.

English summary
Tamil and Malayalam writer Thoppil Mohamed Meeran dies at 74 in Thirunelveli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X