திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உதாரணமான செயல்பாடு.. ஒவ்வொன்றும் சிறப்பு.. திருநெல்வேலி காவல் துணை ஆணையரை பாராட்டிய முதல்வர்!

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு சமூக ஊடகத்தின் வாயிலாக சிறப்பாக பணியாற்றி திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இன்னும் 3 நாட்கள்தான்.. கொரோனா சுத்தமாக காலி

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் மே 3ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுத்து, வீட்டிற்கே அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் அரசின் அறிவுறுத்தலின் படி கண்காணித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

    tamil nadu chief minister appreciate Arjun Saravanan, Deputy Commissioner of Police thirunelveli

    இதனிடையே திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது டுவிட்டர் பக்கத்திற்கு மக்கள் கேட்கும் உதவிகளை செய்து வருகிறார்.

    அந்த வகையில் பலருக்கு மருந்து, சிலிண்டர், மாஸ்க் உள்ளிட்டவற்றை கிடைக்க வழிவகை செய்துள்ளார். அண்மையில் வெளிநாட்டில் இருக்கும் பிச்சைராஜா என்பவர் அர்ஜுன் சரவணனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, "நான் வெளிநாட்டில் இருக்கிறேன். எனது பெற்றோர்கள் வயதானவர்கள். தச்சநல்லூர் விக்னேஷ் நகரில் வசிக்கிறார்கள். ஏதேனும் எமர்ஜென்சி என்றால் என்ன நம்பரைத் தொடர்பு கொள்ள வேண்டும்" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதையடுத்துஅவருடைய குடும்பத்தினரைச் சந்தித்து மாஸ்க், சானிடைசர்கள் ஆகியவற்றைக் காவல்துறையினர் வழங்கியுள்ளனர். அந்தப் புகைப்படத்தை அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிச்சை ராஜா ட்வீட்டைக் குறிப்பிட்டு, "நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்பட வேண்டாம் ப்ரோ" என்று கூறியிருந்தார்.

    அர்ஜுன் சரவணனின் இந்தப் பதிலைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், "காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக தங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பானதாக உள்ளது. சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்காக ஓடோடி உதவும் தங்களின் பணி சிறக்கவும், சேவை தொடரவும் எனது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்!" என்று கூறியிருந்தார்.

    முதல்வரின் பாராட்டுக்கு அர்ஜுன் சரவணன், "மிக்க நன்றி ஜயா. திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக தொடர்ந்து சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை" என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    tamil nadu chief minister edappadi palanisamy appreciate Arjun Saravanan, Deputy Commissioner of Police thirunelveli city
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X