திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லையில் ரூ. 196.75 கோடியில்...சிறப்பு திட்டங்கள்...முதல்வர் திறப்பு!!

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் ரூ.1000 கோடியில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகளை கட்டப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்தார். நெல்லையில் ரூ. 196.75 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை துவக்கி வைத்த பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிடுவதற்கும், புதிய திட்டங்களை துவக்கி வைப்பதற்கும் வந்துள்ளார். நெல்லையில் ரூ. 196.75 கோடி மதிப்பீட்டில் சிறப்பு திட்டங்களை துவக்கி வைத்தார். ரூ. 78.77 கோடியில் தென்காசி மாவட்டத்துக்கு என்று சிறப்பு திட்டங்களை துவக்கி வைத்தார். இதையடுத்து, இந்த மாட்டங்களுக்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டரிம் கொரோனா பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Tamil Nadu government is building new check dams says CM Edappadi Palaniswamy in Nellai

இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''கொரோன பொது முடக்க காலத்தில் மக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்தது. தாமிரபரணி, கருமேனியாறு இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் முட்டுக்கட்டையாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது'' என்றார்.

பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடிபாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி

இதற்கு முன்னதாக முதல்வரை திருநெல்வேலியில் வரவேற்பதற்கான பட்டியலில் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன் பெயர் இடம் பெற்று இருந்தது. இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டத்தை அடுத்து சிகிச்சையில் இருக்கிறார். இதேபோல், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவீந்திரன் மற்றும் கொரோனா வார்டில் சிறப்பு அதிகாரியாக இருக்கும் முன்னாள் டீன் கண்ணன் ஆகியோருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

English summary
Tamil Nadu government is building new check dams says CM Edappadi Palaniswamy in Nellai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X