திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்கள் ஒரு தவறும் செய்யவில்லை.. மக்களை சந்திப்போம்.. தங்கத் தமிழ்ச்செல்வன் ஆவேசம்

தீர்ப்பை கண்டு அழுவதா, சிரிப்பதா தெரியவில்லை என தங்க. தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தங்கத் தமிழ்ச்செல்வன் ஆவேச பேட்டி- வீடியோ

    குற்றாலம்: ஒவ்வொரு நீதிபதியும் ஒரு தீர்ப்பு சொல்கிறார்கள் என்றும், நீதிபதியின் தீர்ப்பை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை என்றும் டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

    கடந்த நான்கைந்து தினங்களாகவே 18 எம்எல்ஏக்கள் குறித்த தீர்ப்பு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டே இருந்தது. அதனால் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் குற்றாலத்தில் 3 நாட்களாக தங்கி இருக்கிறார்கள்.

    [தகுதி நீக்கம் செல்லும் என்றாலும் அரசுக்கு ஆபத்து நீடிக்கதான் செய்கிறது.. எப்படி தெரியுமா?]

    நேராக கோட்டைதான்

    நேராக கோட்டைதான்

    அப்போது, தினந்தோறும் தங்க.தமிழ்ச் செல்வன்தான் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசி வந்தார். ஒருமுறை பேசுகையில், "வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் குற்றாலத்தில் இருந்து நேராக கோட்டைக்குத்தான் செல்வோம்... எங்கள் 18 பேரில் ஒருவர்தான் அடுத்த முதல்வர், அதனால் ஆட்சியை கலைக்க மாட்டோம்" என்றார்.

    கவலைப்பட மாட்டோம்

    கவலைப்பட மாட்டோம்

    பிறகு மற்றொரு முறை செய்தியாளர்களிடம் பேசும்போது, தீர்ப்பு பாதகமாக வந்தாலும் சரி கவலைப்பட எதற்கும் மாட்டோம். ஆனால் முதலமைச்சர், மற்றும் சில அமைச்சர்களை மாற்றி விட்டு ஆட்சியை தொடர்ந்து நடத்துவோம் என்றார்.

    ஆளுநரை சந்தித்தோம்

    ஆளுநரை சந்தித்தோம்

    இந்நிலையில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதுகுறித்து குற்றாலத்தில் தங்க தமிழ்செல்வனிடமே செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், "18 எம்எல்ஏக்களான நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அதேபோல கொறடா உத்தரவையும் நாங்கள் மீறவில்லை. ஆளுநரை சந்தித்துவிட்டு வந்தது ஒன்றுதான் எங்கள் மீதான குற்றச்சாட்டு.

    அழுவதா, சிரிப்பதா?

    அழுவதா, சிரிப்பதா?

    ஆனால் தற்போது ஒவ்வொரு நீதிபதியும் ஒரு தீர்ப்பு சொல்கிறார்கள். நீதிபதி அளித்துதள்ள இந்த தீர்ப்பை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. இருந்தாலும் தீர்ப்பின் முழு விவரம் தெரிந்த பிறகு நாங்கள் கருத்துசொல்கிறோம். மக்களை சந்திக்க நாங்கள் தயார். மக்கள் மன்றத்தின் தீர்ப்பை மனதார ஏற்போம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

    English summary
    Thanga Thamizh Selvan commented on the 18 MLA's Case verdict
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X