• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஒதுக்குப்புறத்தில் காதல் ஜோடி.. மும்முரமாக கசமுசா.. மிரட்டி அத்துமீறிய கும்பலை தூக்கிய நெல்லை போலீஸ்

|

நெல்லை: "எங்கள விட்டுருங்க..ண்ணா.. ப்ளீஸ்.. தெரியாம தப்பு பண்ணிட்டோம்" என்று ஒதுக்குப்புறத்தில் கசமுசாவில் ஈடுபட்ட காதல் ஜோடியை கதற விட்ட வழிப்பறி கும்பலின் முக்கிய புள்ளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாநகரின் புறநகர் பகுதி ரெட்டியார்பட்டி.. இது மலைப்பகுதி போன்ற இடமாகும்.. ஷூட்டிங் ஸ்பாட்டாகவும் உள்ளது.. சிங்கம் படம் உட்பட நிறைய ஷூட்டிங் இங்குள்ள ரெட்டியார்பட்டி இரட்டை மலை பாபாஸ் சாலையில் நடந்துள்ளது.

இந்த பகுதியை சுற்றுலா தலமாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. ஆனால் அது தற்போது கிடப்பில் உள்ளது.. அதனால் ஆள்நடமாட்டம் அவ்வளவாக இல்லாத பகுதியாக உள்ளது.

காதல் ஜோடி

காதல் ஜோடி

இதை பயன்படுத்தி கொண்டுதான் சாயங்கால நேரங்களில் லவ் ஜோடிகள் அங்கு ஒதுங்குவார்கள். அவர்களை குறி வைத்து ஒரு கும்பல் பணம், செல்போன்களை பறித்து கொண்டு இருந்திருக்கிறது.. அதேபோல பைக் ஓட்டி பழகுபவர்கள்கூட அந்த சாலையில்தான் பழகுவார்கள், சாகசம் காட்டுவார்கள். இப்போது லாக்டவுன் என்பதால் அந்த ரோடு இன்னும் காலியாக உள்ளது.

பிறந்த நாள் பரிசு

பிறந்த நாள் பரிசு

யாராவது அந்த பகுதிகளில் நடமாடினாலே அவர்களிடம் வழிப்பறி நடப்பதும் அதிகரித்துள்ளது. அதனால் அந்த இடங்களில் மக்கள் நடமாடவே அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில்தான் ஒரு காதல் ஜோடி கடந்த வாரம் ஒதுங்கியது.. காதலனுக்கு பிறந்த நாளாம். கிஃப்ட் தருவதற்காக இங்கு வந்திருக்கிறார்.. அந்த பெண் கல்லூரி மாணவி.

கசமுசா

கசமுசா

ஒருகட்டத்தில் கசமுசாவிலும் காதலர்கள் இறங்கிவிட்டதாக தெரிகிறது.. இதை ஒரு கும்பல் மறைந்திருந்து பார்த்து விட்டது.. செல்போனிலும் படம் பிடித்து கொண்டது. பிறகு அந்த ஜோடியிடம் சென்று 2 பேரையும் பிடித்து தரையில் உட்கார வைத்து மண்டியிட வைத்தது. தனித்தனியாக யார் யார் என்ற விவரங்களை மிரட்டி கேட்டது.. வீட்டில் சொல்லிவிடுவோம், வீடியோவை காட்டிவிடுவோம் என்றும் மிரட்டியது.. "எங்களை விட்டுருங்க..ண்ணா.. தெரியாம பண்ணிட்டோம்.. இனிமேல் இங்க வர மாட்டோம்" என்று அந்த பெண் கதறியும் விடவில்லை.

மிரட்டல்

மிரட்டல்

இதையும் வீடியோவாக எடுத்து வைத்து கொண்டது.. கடைசியில் அவர்களிடம் இருந்த பணம், செல்போனையும் பறித்து கொண்டு தப்பி ஓடியது.. நடந்ததை வெளியே சொன்னால், வீடியோவை வெளியிடுவோம் என்று இறுதியாக சொல்லிவிட்டு கிளம்பி சென்றது.. இதற்கு பயந்து கொண்டு அந்த காதலர்களும் எதையும் வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

காதலர்கள்

காதலர்கள்

ஆனால் பணம், செல்போனை பிடுங்கி கொண்டு போன கும்பலோ, அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டனர்.. அந்த வீடியோவில் காதலர்கள் கெஞ்சுவதும், கதறுவதும் மனதை பிசைந்தெடுத்தது. இந்த வீடியோ வெளிவருவதற்கு முன்பு வரை வழிப்பறி சம்பந்தமாக போலீசார் மும்முரம் காட்டாத நிலையில், இந்த வீடியோ அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது.

துரித நடவடிக்கை

துரித நடவடிக்கை

வடமாநிலங்களில் நடப்பதுபோலவே இங்கும் நடக்க தொடங்கியுள்ளதால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டது.. அதன்பிறகுதான், வீடியோவில் காதலர்கள் சொன்ன அட்ரஸ், தகவலை வைத்து கொண்டு, அதன் உண்மைதன்மையை அறிய போலீசார் முற்பட்டனர்.. பிறகுதான் அந்த கும்பல் மீது புகார் தரப்பட்டது.

விசாரணை

விசாரணை

இதன் அடிப்படையில் வழிப்பறி கும்பலை போலீசார் தேடி வந்தனர்.. இறுதியில் அதில் தொடர்புடைய முத்துக்குமார் என்பவரை கைது செய்தனர்.. முன்னீர் பள்ளத்தை சேர்ந்தவனாம் இந்த முத்துக்குமார்.. இதே பகுதியில் இதுவரை 10 காதல் ஜோடிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளானாம்.. இவனது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதனிடையே, வழிப்பறி பகுதியில் ரோந்து வாகனம் ஒன்றை நிறுத்தி வைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
the gang threaten lovers near nellai, and one arrested
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X