திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டணி குறித்து விமர்சிப்பதா... அப்போ, எந்த கட்சியோடும் யாரும் கூட்டணி வைக்க முடியாது... வைகோ பளீச்

Google Oneindia Tamil News

நெல்லை: கூட்டணி குறித்து விமர்சித்தால் இந்தியாவில் எந்த கட்சியோடும் யாரும் கூட்டணி வைக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ, அப்போது, அதிமுக - பாமக கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராமதாஸ் மேல் நல்ல மதிப்பு வைத்துள்ளேன். சமூக நீதிக்காக போராடியவர் என்றார்.

There is no need to comment on the AIADMK-PMK Alliance Says Vaiko

நான் பொதுவாக மற்ற கட்சிகளை விமர்சிப்பது கிடையாது என்று கூறிய வைகோ, அதிமுக - பாமக கூட்டணி குறித்து கருத்து கூற தேவையில்லை என்று கூறினார். ஒவ்வொரு கட்சியும் உடன்பாடு வைக்கும் போது தொகுதியை பிரித்துக்கொள்வர் என்றும் நான் திமுக கூட்டணியில் உள்ளேன்: அந்த கூட்டணி வெற்றி பெற பாடுபடுவேன் எனவும் கூறினார்.

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், திமுகவில் நாங்கள் இருக்கிறோம் என்பதை அந்த கட்சி விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

English summary
MDMK general secretary Vaiko has said that If Criticizes the coalition Than, no one can ever be associated with any party in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X