திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொன்றது யார்.. ஏன்.. ஒரு துப்பும் கிடைக்கவில்லை.. உமா மகேஸ்வரி கொலையில் விழி பிதுங்கும் போலீஸ்

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை விசாரணை தீவிரமாகி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக மேயர் உமா படுகொலை! அதிர வைக்கும் நெல்லை

    நெல்லை: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலையில் ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் 3-வது நாளாக விழி பிதுங்கி போயுள்ளனர்.

    நெல்லையின் முதல் பெண் மேயராக திமுகவின் உமா மகேஸ்வரி பொறுப்பு வகித்தார். இதைதவிர அவர் திமுக மாவட்ட மகளிரணி பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் அவர் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உமா உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசந்திரன், வீட்டு வேலைக்கார பெண் மாரி ஆகிய 3 பேரையும் ஒவ்வொரு ரூமில் வைத்து கம்பி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் வீட்டில் 10 பவுன் நகை, மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்

    நோட்டீஸ்

    நோட்டீஸ்

    கொலையாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதால் பரபரப்பு அதிகமானது. மேலும் தலித் மற்றும் ஆதிவாசி பட்டியலின ஆணையம் 3 நாளில் இதை பற்றி பதிலளிக்குமாறு தமிழக டிஜிபிக்கும், மாவட்ட காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் விசாரணையை இன்னும் தீவிரமாக்கி விட்டது.

    தீவிரம்

    தீவிரம்

    இதையடுத்து 3 நாளாகவே காவல்துறை அதிகாரிகள் கொலையாளிகளை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கி வருகின்றனர். முன்விரோதமா, சொத்துக்காகவா, அரசியல் விரோதமா, நகை, பணத்துக்காகவா என்ற ரீதியில் விசாரணை ஆரம்பமானது.

    3 தனிப்படை

    3 தனிப்படை

    உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்ததில் உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் ஆழத்துக்கு கத்தியால் குத்தி... கொடூரமாக திருகி கொலை செய்துள்ளதாக ரிப்போர்ட் வந்துள்ளது. இதனால் முதல் வேலையாக கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    வடமாநிலத்தவரா?

    வடமாநிலத்தவரா?

    70 பேரிடம் விசாரணையை போலீசார் ஆரம்பித்தனர். இதன்பிறகுதான் அப்படியே 50 பேர், 40 பேர் என சுருங்கி, தற்போது 4 ஆண்கள், 3 பெண்கள் என 7 பேர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர். இதை தவிர அந்த பக்கம் சுற்றி திரிந்த 2 பேரையும் சந்தேகத்தின்பேரில் விசாரித்து வருகிறார்கள். சினிமா பாணியில் நடந்த இந்த கொலையை பார்த்தால் வடமாநில கொலையாளிகள் ஈடுபட்டிருக்கலாமோ என்ற ரீதியில் ஒரு பக்கம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    திணறல்

    திணறல்

    வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாதது பெரிய மைனஸாக உள்ளது. ஆனால் கொலையாளிகள் உமா மகேஸ்வரி குடும்பத்திற்கு ரொம்ப தெரிந்தவர்களாகத்தான் இருக்கும் என்கிறார்கள் போலீசார். ஏனெனில் வந்தவர்கள் வீட்டின் ஹாலில் உட்கார்ந்து தண்ணீர் குடித்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதாம். இருந்தாலும் கொலையாளிகள் பற்றின எந்த துப்புமே கிடைக்காமல் 3-வது நாளாக போலீசார் திணறி வருகிறார்கள்!

    English summary
    Thirunelveli Mayor Uma maheswari murder case and police investigation is going on 3rd day
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X