திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'கடைசியாக.. டீ சொல்லுங்க ராஜேந்திரன்'.. திருநெல்வேலி டிசிபி டுவிட்.. நெட்டிசன்கள் கொடுத்த விருந்து

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டதை குறிக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர டிசிபி அர்ஜுன் சரவணன் இன்று காலை ஒரு டுவிட் போட்டார் அது செம்ம வைரலாகி வருகிறது.

Recommended Video

    நிர்பயா குற்றவாளிகளுக்கு நேர்ந்த கதி இதுதான்

    டெல்லியில் துணை மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நான்கு பேரும் மரண தண்டனை நிறைவேறுவதை தடுக்க நீதிமன்றங்களில் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் ஒருவர் மாற்றி ஒருவர் கருணை மனுக்களையும் தாக்கல் செய்தனர்.

     தூக்கத்திலிருந்து எழும்பியது முதல் தூக்கு வரை.. நிர்பயா குற்றவாளிகளின் கடைசி திக் திக் நிமிடங்கள் தூக்கத்திலிருந்து எழும்பியது முதல் தூக்கு வரை.. நிர்பயா குற்றவாளிகளின் கடைசி திக் திக் நிமிடங்கள்

    தூக்கு தண்டனை

    தூக்கு தண்டனை

    இதனால் தூக்கு தண்டனை நிறைவேறுவது தள்ளிப்போய் கொண்டே இருந்தது. நேற்று இரவுகூட ஐகோர்டிலும் இன்று அதிகாலை உச்ச நீதிமன்றத்திலும் மனு போட்டனர். ஆனால் எல்லாம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதையடுத்து இறுதியாக இன்று அதிகாலை 5.30 மணி அளவில் முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகிய நான்கு பேரும் சாகும் வரை தூக்கிலிடப்பட்டனர்.

    நீதி கிடைத்துவிட்டது

    நீதி கிடைத்துவிட்டது

    இத்துடன் நிர்பயாவை பலாத்காரம் செய்து கொன்ற நான்கு குற்றவாளிகளின் அத்தியாயம் முடிந்துள்ளது. நிர்பயாவுக்கு (பயம் அறியாதவள்) நீதி கிடைத்து விட்டது நாடே இன்று கொண்டாடி வருகிறது. பலரும் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய அரசை பாராட்டி வருகிறார்கள்.

    சரவணன் போட்ட டுவிட்

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை குறிக்கும் வகையில் ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் "கடைசியாக.. டீ சொல்லுங்க ராஜேந்திரன்'.. என்று போட்டுள்ளார். அதில் விஜய் போலீஸ் ஜீப்பில் அமர்ந்திருக்கும் தெறி பட புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

    ஜீப் மீது விஜய்

    ஜீப் மீது விஜய்

    தெறி படத்தில் பாலியல் வன்கொடுமை செய்த அரசியல்வாதியின் மகனை விஜய் கொன்று கூவத்தில் வீசுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சிக்குபிறகே விஜய் டீ சொல்லுங்க ராஜேந்திரன் என்று கூறுவார். இது தெறி படத்தில் மிக மாஸ் சீனா இருந்தது. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீன் ஆகும். இதை டிஎஸ்பி சரவணன் வெளியிட்டிருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்த நெட்டிசன்கள் காவல்துறையை வெகுவாக பாராட்டி டுவிட் போட்டு வருகிறார்கள். மேலும் அவரது டுவிட்டை பலரும் ரிடுவிட் செய்து வருகிறார்கள்.

    நெட்டிசன்கள் பதில்

    ஒருவர் செம்ம என்று கூறியதுடன், நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க என்று வடிவேலு மீம்ஸை போட்டுள்ளார். இன்னொருவர் இந்த படத்தில் வரும் சீனை.. இதுபோன்ற சம்பவங்களில் உங்களிடம் இருந்து நி‌ஜத்தில் எதிர்பார்க்கிறோம் சார்.. பொள்ளாச்சியில் இருந்து ஆரம்பியுங்கள் டீ என்ன விருந்தே வச்சிடுறோம்!! என்று கூறியுள்ளார். இன்னொருவர் ஐயா இந்த சீனை நாங்கள் பெரிதும் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளிடம் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

    English summary
    Tirunelveli deputy Commissioner of police arjun saravanan tweet about nirbhaya convicts hanged with vijay movie image
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X